ஒவ்வொருவரின் வாழ்க்கை, நினைப்புகளைப் பொறுத்து வரும். மேலும் அத்தகைய கனவுகளை, சில மக்கள் கடவுள் தம்மிடம் ஏதோ ஒரு விஷயத்தை தான் கனவின் மூலம் தனக்கு சொல்கிறார் என்றும், சிலர் அவ்வாறு வரும் கனவுகள் அனைத்தும் நிச்சயம் உண்மையாகும் என்று நம்கிக் கொண்டிருக்கின்றனர். ஆகவே இப்போது அந்த கனவுகள் வருவதற்கான உண்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!
* இரவில் படுக்கும் போது வரும் கனவுகளில் சிலவற்றை, காலையில் எழுந்திருக்கும் போது நம்மால் ஞாபகப்படுத்திப் பார்ப்பது என்பது கடினமானதாக இருக்கும். அதுவே பயத்தை ஏற்படுத்தும் கனவுகள் என்றால் எப்போதும் ஞாபகத்தில் இருக்கும். ஆனால் சரியாக தெளிவாக இருக்காது. ஏனெனில் நமது மனம் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் போது, அந்த கனவுகளை சிறிது நேரம் வேண்டுமென்றால் ஞாபகத்தில் வைத்திருக்கும். ஆனால் நீண்ட நேரம் மனதில் இருக்காது.
* யாரைப் பற்றி அதிகம் மனதில் அவர்களும் கனவில் வருவார்கள். ஏனெனில் நமது மனம் முழுவதும் அவர்களையே நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே அவர்களை கனவில் ஏதேனும் ஒரு இடத்தில் சந்தித்து பேசுவது போல் தோன்றும். ஆனால் இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், அத்தகைய கனவுகள் நீண்ட நேரம் மனதில் நன்கு பதிந்து இருக்கும். உருவரை நாம் எவ்வளவு நேசிக்கின்றோமோ, அவர்களை எப்படி மறக்க முடியாதோ, அதேப்போல் தான் அவர்கள் மீது வைத்துள்ள பாசத்தால், கனவில் வந்தால் கூட அவர்களை மறக்க முடியவில்லை.
* சில கனவுகள் நடந்து உங்கள் கடந்த வாழ்க்கையை மையமாக கொண்டு வரும். அதாவது, நீங்கள் திடீரென்று உங்கள் சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போது, உங்கள் பழைய வீட்டில் இருக்கும் போது ஏற்பட்ட ஒரு சிலவற்றை கனவில் கூட காண நேரலாம். ஏனெனில் அவை அனைத்தும் உங்கள் மனதில் நன்கு பதிந்துள்ளது என்பதால் தான், அத்தகைய கனவுகள் எல்லாம் வருகின்றன. சிலசமயங்களில் உங்களது எதிர் காலம் கூட கனவில் வரும். உதாரணமாக, நீங்கள் எதாவது ஒரு இடத்தில் யாரையோ சந்திப்பது போல வரும். மேலும் கனவுகள் தூக்கத்தின் போது மட்டும் வருவதில்லை, விழித்திருக்கும் போதும் கூட வரும். ஆனால் அத்தகைய கனவுகள் உங்கள் மனதில் நீங்காது இடம் பெற்றிருந்தால் மட்டுமே வரும்.
* இரவில் உறங்கும் போது, ஒருவருக்கு குறைந்தது 2-4 கனவுகள் வரும் வாய்ப்புள்ளது. ஆனால் அவை அனைத்தையும் ஞாபகப்படுத்த முடியாது. அவை அனைத்தும் மறந்துவிடும். ஒரு சில கனவுகளை மட்டுமே நினைவில் வைத்திருக்க முடியும். ஏனெனில் உங்களுக்கு வரும் கனவுகள் உங்கள் மனதை அல்லது உணர்ச்சியை பாதிக்கும் வகையில் இருந்தால், அந்த கனவுகள் மறக்காமல் இருக்கும்.
ஆகவே கனவுகள் அனைத்தும் ஒவ்வொருவரின் உணர்ச்சி, ஆசை, உள்ளத்தின் பாதிப்பு, பயம் போன்ற பல காரணங்களால் வரும். எதை நம்மால் நிஜத்தில் அடைய முடியவில்லையோ, அவற்றை கனவில் நிச்சயம் அடைந்துவிடுவோம். ஏனெனில் கனவில், நாம் தான் பெரிய ஹீரோ. அங்கு நாம் நினைப்பது தானே நடக்கும். என்ன நண்பர்களே! நீங்கள் உங்கள் கனவில் என்ன ஆசையை நிறைவேறி இருக்கீங்க? அதை எங்களுடன் பகிர்ந்து மகிழுங்களேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக