வெள்ளி, 2 நவம்பர், 2012

அறிவான பெண் வேண்டும் இது ஆண்களின் விருப்பம்!


 சேர்ந்த, 12 ஆயிரம் பேரிடம் கணக்கெடுப்பு நடத்தியது. இதன் மூலம், தற்கால ஆண், பெண் விருப்பங்கள் பற்றி, பல்வேறு, ருசிகர தகவல்கள் வெளிவந்துள்ளன.

அறிவான பெண்கள்

சமீப காலமாக, பெண்களை, அவர்களின் தோற்றத்தின் மூலம், ஆண்கள் மதிப்பிடுவதில்லை. மாறாக, பெண்களின் அறிவுத் திறன், பண்பான குணங்கள் போன்றவையே, ஆண்களை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன.

வீட்டு வேலையோ, அலுவலக வேலையோ இரண்டையுமே பேலன்ஸ் செய்வதில் புத்திசாலிப் பெண்களுக்குத்தான் தனி திறமை உண்டு. அழகுப் பதுமைகளாக இருக்கும் பெண்கள் எதற்கெடுத்தாலும் தங்களைத்தான் எதிர்பார்க்கின்றனர். எனவே அழகு என்பதை விட புத்திசாலியான பெண்கள்தான் வாழ்க்கைத்துணையாக வேண்டும் என்று ஆண்கள் கூறியுள்ளனர்.

அழகான ஆண்கள்

அதே சமயத்தில், ஆண்களிடம், வசதியை எதிர்பார்க்கும் பெண்கள், வெகுவாக குறைந்து விட்டனர். நல்ல உடற்கட்டுடன், அழகாக தோற்றம் அளிக்கும், ஆண்களுக்குத்தான் தற்கால பெண்கள், அதிக மதிப்பெண்கள் தந்துள்ளனர். ஆண்களுக்கு, நிகராக, பெண்களின், பொருள் ஈட்டும் திறன் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். ஆண்களின் பணத்தை நம்பி, வாழ வேண்டிய அவசியம் பெண்களுக்கு குறைந்து போய் உள்ளதால், அவர்களது எதிர்காலம் பற்றிய, சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வாரிசுகளுக்கு, தன் கணவனால், வசதியான எதிர்காலத்தை தர முடியுமா என்றும், இக்கால பெண்கள் நினைப்பதில்லை.

பெண்களிடம் ஏற்பட்டு வரும், இந்த மாற்றம் காரணமாக, இனி ஆண்கள், "பணம்... பணம்' என்று ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்க வேண்டி இருக்காது. தம் உடலை அழகாக பேணி வந்தாலே போதும் என்ற நிலை உருவாகி வருவதால், ஆண்கள் இனி, நிம்மதிப் பெருமூச்சு விடலாம். இவ்வாறு சர்வே முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆண் மற்றும் பெண்களின் எதிர்பார்ப்புகள் மாறி வருகிறது என்பதையே இந்த கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக