வெள்ளி, 8 நவம்பர், 2013

காதல் உண்மைகளும் இரகசியங்களும் .!!

இந்த உலகில் எழுதப்பட்ட இலக்கியங்கள், கதைகள், கட்டுரைகள் பெரும்பாலனவற்றில் காதலின் தாக்கம் நேரடியாகவோ மறைமுகமகவோ இருந்திருகிறது . காதலை பற்றி எழுதாத எழுதாளர்களே இருக்க முடியாது. எத்தனை புத்தகங்கள் எ

ழுதபட்டாலும் , எவ்வளவு விமர்சனங்கள் செய்யப்பட்டாலும் இதுவரை முழுவதுமாய் விடை தெரியாத ஓர் உணர்வு காதல்.
உடல் ரீதியான தேவைகளை வெளிபடுத்தும் உணர்வுகளான பசி, தாகம், போன்ற ஓர் உணர்வு காமம். சரியாக சொன்னால் காதலின் மையப்புள்ளி அல்லது ஆதரம் காமம் . பாலியல் தேவைகளோ, ஆசைகளோ மனிதர்களுக்கு இல்லாதிருந்தால் காதல் என்ற உணர்வே மனிதர்களுக்கு உண்டாயிருக்காது என்பது உண்மை .
உடலில் ஏற்படும் ஹார்மோன் வளர்ச்சி அல்லது மாற்றம் காம உணர்வை தூண்டுகிறது துண்டப்படும் உணர்வால் உந்தபடும் ஆசை உயிர் பெறும்போது காதல் மலர்கிறது . டினேஜ் பருவத்தில் ஹார்மோன்களின் ஆதிக்கம் தொடங்கிறது அல்லது அதிகமாகிறது . இங்கேதான் மனிதர்களுடைய மனம் தனது காதல் பயணத்தின் முதல் அடியை எடுத்து வைக்கிறது . இங்கே அந்த பயணத்தின் வேகமும் சற்று அதிகமாக இருக்கிறது .காதலின் தன்மை காதலர்களின் வயதையும், பக்குவத்தையும் சார்ந்து மாறுபடுகிறது. பொதுவாக டினேஜ் காதல்கள் உடல் கவர்ச்சியையும் உணர்வுகளின் கொந்தளிப்பையும் சார்ந்து இருக்கிறது .
அனால் எந்த வயதில் காதல் உணர்வு வந்தாலும் அதில் காம வாசனை வீசாமல் இருக்காது அதில் பாலியல் தேவையின் அளவு மட்டும் உடல் சார்ந்தும்,மனம் சார்ந்தும், வயது சார்ந்தும் நபர்களை பொறுத்து மாறுபடலாம்.அனால் உடல் சார்ந்த பாலியல் தேவைக்காக மட்டும் காதல் என்ற உணர்வு மனிதர்களுகிடையே வாழ்கிறது என தீர்க்கமாக சொல்ல முடியாது .அதையும் தவிர்த்து சில விஷயங்கள் காதல் என்ற சுவரசியதுக்குள் ஒளிந்திருக்கிறது .
பல ஆயிரம் மனித உயிர்களை எந்த தடுமாற்றமும், இரக்கமும் இல்லாமல் கொன்றவன், உலக நாடுகளையே நடுங்க வைத்தவன் ஹிட்லர் . அந்த இரும்பு இதயத்திர்குள்ளும் ஒர் இனிமையான காதல் மலர்ந்திருந்திருக்கிறது .வெறும் பாலியல் தேவை மட்டுமே காதலின் நோக்கம் என்றால் ஹிட்லரால் அதை தன் காதலி ஈவாபிரவினிடம் எளிதாக அடந்திருகமுடியும், பலியல் தேவைகளை தவிர்த்து பல விசியங்கள் காதலுக்குள் இருப்பதால் தான் ஹிட்லராலும் காதலிக்க முடிந்தது .
ஆதி மனிதன் ஆதாமிடம் இறைவன் குறிப்பிட்ட கனியை மட்டும் சாப்பிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட போதும் ஏவாளின் வார்த்தையை நம்பி கனியை சாப்பிட்டு பாவத்திற்கு ஆளாகிறான் ஏன் தெரியுமா ? மனிதன் இறைவனை விட தன் காதலை நம்புகிறான் .நம்ப வைக்கிற சக்தி காதலுக்கு உண்டு .
உண்மை காதல் ஒருமுறை தான் மலரும் என்பது முட்டாள் தனமானது , பொய்யானது , அபத்தமானது .இப்படி பட்ட கருத்துகளை நம் சமுதாயத்தின் மீது ஆழமாக பதிய வைத்ததிற்க்கு திரைபடங்களுக்கு பெரும் பங்கு உண்டு .
வாழ்வின் பெரும் பகுதியை போர்களத்தில் கழித்த நெப்போலியன் , போர்களத்திலிருந்து காதல் ரசம் சொட்டும் உருக்கமான பல கடிதங்களை தன் காதல் மனைவி ஜோஸ்பினுக்கு எழுதி இருந்தான் .அவன் எழுதிய கடிதங்கள் பிற்காலத்தில் உலக புகழ் பெற்ற காதல் கடிதங்களாயின . அவன் எழுதிருந்த ஒவ்வரு வ்ரிகளும் நெப்போலியனின் அழமான காதலை உணர்த்துவதாக இருந்தது .இப்படி உலக புகழ் பெற்ற காதல் கடிதம் எழுதிய நேப்போலியனே பிறகு வேறொரு திருமணம் செய்யும் சூழல் ஏற்பட்டது அப்படியெனில் நெப்போலின் முதல் காதல் உண்மையானது இல்லையா ?
தன் காதல் மனைவிக்காக உலக அதிசயத்தில் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹாலை கட்டிய ஷாஜஹானுக்கு மும்தாஜ் முதல் காதலி அல்ல .அப்படியெனில் ஷாஜகானுக்கு மும்தாஜிடம் இருந்த காதல் உண்மையானது இல்லையா ?
சந்தர்ப்ப சுழ்நிலைகளாலும் கருத்து வேற்றுமையினாலும் காதல் உறவுகள் முறிந்து போவதுண்டு ஆனால் காதல் அழிந்து விடுவதில்லை . காதல் நினைவுகள் இதயத்தின் ஒர் ஓரத்தில் இருந்து கொண்டு தான் இருக்கும் . அது வலி அல்ல சுகம் முதல் காதல் மட்டுமல்ல வாழ்கையில் நடக்கிற முதல் நிகழ்வுகள், கிடைக்கிற முதல் பொருள் முதல் வெற்றி இப்படி அனைத்தும் மனதில் பதிந்து இருக்குமே தவிர வாழ்கையின் பாதையை பாதிப்திலை .
காதல் உற்வு முறிந்து போகும் போது காதல் துணையை எப்படி பழிவாங்கவும் ,கொலை செய்யவும் , அல்லது தற்கொலை செய்யவும் மனம் தயாராகிறது .கொலை செய்யவும் பழிவாங்கவும் மனம் தூண்டுகிறது என்றால் அது சுயநலம் .தற்கொலைக்கு மனம் தூண்டுகிறது என்றால் அது பலவீனம் , தழ்வுமனபான்மை .இதை உளவியல் ரீதியாக எதிர்மறை எண்ணங்கள் எனலாம் . இந்த எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் போது அது மன நோயாகவும் மாறுகிறது .தன் காதல் பலமானதகவும் , உண்மையாகவும் இருக்கும் போது எதிர்மறை எண்ணங்கள் உருவாவதில்லை .
தன்னுடைய காதல் துனையால் ஏமாற்ற படும்போது தனக்கு இதைவிட நல்ல துணை கிடைக்கும் என நம்பாதவர்கள் தன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் .அவர்களிடம் இருந்தது காதல் அல்ல வாய்ப்பை பயன்படுத்தும் தந்திரம் .
காதல் முறியும் போது இருக்கும் கோபம் இனோரு அழகான வாழக்கை கிடைக்கும் போது மறைந்து விடுகிறது காதல் முறிந்த பின் வாழ்கையை சரியாக அமைக்க தெரியாதவர்களுக்கும் , அமைக்க தவறியவர்களுகும் மட்டும் தான் எதிர்மறை எண்ணங்கள் உருவாகிறது .

புதன், 14 ஆகஸ்ட், 2013

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?

அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்களை புரிந்து கொள்வது என்பது ஆண்களுக்கு சற்று குழப்பமாகவே உள்ளது. எந்த நேரத்தில் என்ன நினைக்கிறார்கள் என்று பல ஆண்களுக்கு தெரியவில்லை. பெண்களை புரிந்து கொண்டவன் அவர்களின் கலாப காதலன் ஆகிறான்.
ஆண்களில் எந்த வகையான ஆண்களை பிடிக்கும் என்பது ஓரு சின்ன ஆய்வின் மூலம் தெரிந்துள்ளது அதைப்பற்றி இப்போது பார்ப்போம்.பெண்களுக்கு பொதுவாக மிகவும் பிடிக்கும் ஆண்கள் யார் என்று தெரியுமா நகைச்சுவை உணர்வோடு உலா வரும் ஆண்களைத்தான். பெண்களுக்கு எப்பவும் “கடுகடு சிடுசிடு”வேன்று இருக்கும் ஆண்களை பிடிக்கவே பிடிக்காது.
ஆனால் அவர்களை சந்தோஷத்தில் முழ்கடிக்கும் வகையில் “குறும்பும் நகைச்சுவையும் செய்யும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கும். அந்நகைச்சுவை உணர்வோடு காதலனோ அல்லது கணவரோ அமைந்து விட்டால் அவர்களின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
அவர்கள் உங்கள் மீது வைக்கும் காதலுக்கும் அளவு இல்லை. அதற்க்காக 24 மணி நேரமும் காமெடி செய்தாலும் பிடிக்காது மற்றும் முக்கியமான முடிவு எடுக்கும் சமயத்தில் நகைச்சுவையாக இருந்தாலும் பிடிக்காது. வாழ்க்கையில் சின்னஞ்சிறு சண்டையும் வேண்டும், ஊடலும் வேண்டும்.
இவ்வகையான ஆண்களை கணவனாக அடைந்த சில பெண்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது : நான் மிகவும் பாக்கியசாலி என்று நினைக்கிறேன். அவரை நான் மிகவும் காதலிக்கிறேன். நான் அலுவலகத்திலிருந்து மிகவும் கோபத்துடனோ அல்லது சோர்வுடனோ வந்தால், அவர் அவரது நகைச்சுவை உணர்வின் மூலம் என்னை சிரிக்க வைத்துவிடுவார்.
அந்த சமயம் நான் என் கவலைகளையும் மற்றும் களைப்பையும் மறந்து விடுகிறேன். எனக்கு ஒவ்வொரு நாளும் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளகவே செல்கிறது. என்கின்றனர்.என்ன ஆண்களே நீங்கள் எப்படி?

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

ஒரு நல்ல வாழ்க்கை துணைக்கான 7 குணங்கள்!

தலைப்பைச் சேருங்கள்
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க பலவற்றை நாம் கையாளுகின்றோம். பெரும்பாலோனோர் தங்களின் வாழ்க்கை துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்த்து, அதோடு நின்றும் விடுகின்றனர். ஆனால் அது மட்டும் போதாது என்பதை, திருமணத்திற்கு பின்னர் அனுபவத்தின் மூலம் பலரும் புரிந்து கொள்கின்றனர். நம்மில் பலர் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது செய்யும் பெரிய தவறு, நம் வாழ்க்கைத் துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்ப்பது தான். ஆனால் மற்ற நல்ல அம்சங்கள் மற்றும் அவர்களின் இதர குணங்களை கவனிப்பதில்லை. அதற்காக வாழ்க்கைத் துணையின் தோற்றத்தை மட்டும் பார்த்து, இவர் தான் உங்களுக்கு ஏற்றவர் என்று கூறுவது தவறல்ல.
ஆனால் அது மட்டுமே எல்லாம் என்றாகி விடாது. ஆகவே வெறும் வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து எப்போதும் வாழ்க்கை துணையை தேட கூடாது. ஏனெனில் அது ஒரு சிறு சதவீதம் மட்டுமே. இப்போது வாழ்க்கை துணையாக வருபவரிடம் என்னென்ன நல்ல பண்புகள் இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள கீழே படித்து பாருங்கள்.
நீங்கள் நீங்களாகவே இருப்பதனால் உங்களை விரும்புவார்கள்
நீங்கள் நீங்களாக இருக்கும் போதே, உங்களை விரும்பினால், அது வாழ்க்கை துணையின் நல்ல பண்பாகும். ஏன் இதை கூறுகிறோம் என்றால், சில பேர் தன் வாழ்க்கை துணை நல்லதை செய்தால் மட்டுமே விரும்புவார்கள். தங்கள் வாழ்க்கை துணையின் மற்றொரு முகத்தை காண அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் இதுவே நல்ல பண்புள்ள வாழ்க்கை துணையாக இருந்தால், நீங்கள் எப்படிபட்டவராக இருந்தாலும் உங்களை விரும்புவதோடு, கஷ்ட காலங்களில் உங்களுக்கு தோள் கொடுப்பார்.
தன் வார்த்தையை காப்பாற்றுவார்கள்
நல்ல வாழ்க்கை துணை கஷ்ட காலங்களின் போது நழுவாமல் இருப்பதோடு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள், அது தொலைபேசியில் அழைப்பதாகட்டும் அல்லது வெளியில் அழைத்து செல்வதாகட்டும். ஒருவேளை கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாவிட்டால், அதற்கான பொறுப்பான காரணத்தை தெரிவிப்பாரே தவிர, சிறு பிள்ளைத்தனமான காரணத்தைக் கூறமாட்டார்கள்.
பக்கபலமாக இருத்தல்
ஒரு நல்ல வாழ்க்கை துணை, உங்களின் வளர்ச்சியை நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள். அந்த புரிதல் குடும்ப உறவை மீறி, உங்களின் அலுவலக முன்னேற்றத்திலும் கூட. மேலும் உங்களின் வெற்றியை அவருடைய சாதனையாக கருதுவார். அதுமட்டுமல்லாமல், உங்களின் வெற்றிக்கு உங்களை ஊக்கப்படுத்த முற்படுவார்.
தன் காதலை காலநேரம் பார்க்காமல் வெளிகாட்டுவார்கள்
ஒரு நல்ல துணை என்பவர், கால நேரம் எதுவும் பார்க்காமல், தன் காதலை வெளிப்படுத்துவார்கள். மேலும் தன் காதலை உடனுக்குடன் வெளிப்படுத்துவார்கள். அதுமட்டுமின்றி, இந்த உலகத்திலேயே மிகவும் அழகானவராக, வசீகரமுள்ளவராக, தனித்தன்மை உள்ளவராக உங்களை கருதுவார்கள். மற்ற அழகான நபரை கண்ட போதிலும், அவர் மனதில் நீங்கள் மட்டும் தான் குடி கொண்டிருப்பீர்கள்.
பொறுமையுள்ளவராக இருப்பார்கள்
ஒரு உண்மையுள்ள வாழ்க்கைத் துணை, எப்போதும் அவருடன் இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்யமாட்டார்கள். அப்படிப்பட்ட காரியங்களிலும் அவர்கள் ஈடுபடமாட்டார்கள். மேலும் எப்போதும் வலுக்கட்டாயப்படுத்தாமல், உங்கள் மனதை கவர, அவர்களின் காதலை நீங்கள் புரிந்து கொள்ளுமாறு நடந்து கொள்வார்கள்.
தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்வார்கள்
ஒரு நல்ல வாழ்க்கைத் துணை என்பவர், தங்கள் தவறுகளை ஒப்புக் கொண்டு அதற்காக உடனடியாக மன்னிப்பும் கோருவார்கள். இதுவே தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளாமல், உங்கள் மீது பழியை போட நினைப்பவர் வாழ்க்கை துணையாக வந்தால், கண்டிப்பாக அவர் உங்களுக்கு ஏற்றவராக இருக்க முடியாது.
உங்களுக்காக எப்போதும் நேரம் ஒதுக்குபவராக இருப்பார்கள்
எவ்வளவு தான் வேலைப்பளு இருந்தாலும் சரி, ஒரு நல்ல வாழ்க்கை துணை உங்களுக்காக தன் நேரத்தை ஒதுக்க தவறமாட்டார்கள். “சாரி, வேலையில் பிசியாக இருந்து விட்டேன்” என்ற வாக்கியத்தை நல்ல வாழ்க்கை துணையிடம் இருந்து எப்போதும் கேட்கவே முடியாது. ஏனென்றால் அவர் உங்களுடன் இருந்தால், மலையை அசைக்கலாம், கண்டம் விட்டு கண்டம் தாண்டலாம், நாடு விட்டு நாடு பறக்கலாம் என்ற எண்ணங்கள் அவருக்கு ஏற்படும் என்பதால் தான்.

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

காதல் என்றால் என்ன? எவ்வாறு காதலிக்க வேண்டும்?

காதல் என்பது ஒரு வகையான தனித்த உணர்வு. அந்த உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அது உள்ளுக்குள் சென்று ஊடுருவி, அப்படியெல்லாம் எதுவுமில்லை கிடையாது.
காதல் என்பது ஆசை, அன்பு, நட்பு, காமம், விரகம் ஆகிய உணர்வுகளில் ஒன்று அல்லது இவைகள் அனைத்தும் கலந்த ஒரு உணர்வு என்று பெரியார் கூறினார்.
ஜாதி மாறி காதலித்தால் கலாச்சாரம் மாறிவிடும். பண்பாடு கெட்டுவிடும். காதல் என்பது வெளிநாட்டுப் பண்பாடு. காதலை ஒழிக்க வேண்டும். காதல் திருமணங்கள் எல்லாம் பணம் பறிக்க நடக்கும் நாடகத் திருமணங்கள் என்று பலர் நினைக்கின்றனர்.
முதலில் காதல் என்பது வெளிநாட்டுப் பண்பாடா என்று பார்க்க வேண்டியுள்ளது.
இப்படிப் பேசுபவர்கள் அரிச்சுவடியே தெரியாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். தமிழர் வரலாற்றில் காதல் ஒரு முக்கியமான பண்பாட்டுக்கூறு. தமிழ் இலக்கியங்களில் காதலைப் பற்றிப் பேசப்படாத, காதலைப் போற்றாத ஒரு இலக்கியத்தைக் கூட பார்க்க முடியாது. தமிழ் இலக்கியங்களில் அகநானூறு என்ற இலக்கியம் தமிழரின் காதல் வாழ்க்கையைப் பற்றி, காதலைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது.
தமிழ் இலக்கியங்களில் உள்ளது அதனால் காதலிக்க வேண்டும் என்று பேச வரவில்லை. இலக்கியங்களில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனின் உணர்விலும் காதல் தோன்றியே தீரும். காதலை எதிர்ப்பவர்கள் வேண்டுமானால் அந்த உணர்வுக்கு காதல் என்ற பெயரை வைக்காமல் வேறு பெயரைக் கூட வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் காதல் என்ற உணர்வுக்கு யாராலும் எதிர்வினையாற்ற முடியாது.
இன்று புத்தகங்கள், திரைப்படம் மற்றும் இணையத்தளத்தில் காதல் கருத்துக்கள் பல வழிகளில் வெளிப்படுகின்றது. ஆனால் உண்மையான காதல் உள்ளுணர்வோடு நாம் வைத்து பழகும்போது தான் அதை உணரமுடியும். சிலருக்கு காதல் செய்யும் போது, ஆரம்ப காலத்தைத் தவிர மற்ற நாட்களில் எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயமும் இல்லாமல், ஃபோர் அடிப்பது போன்று உணர்வார்கள். சிலருக்கு அதனாலேயே காதல் தோல்வி அடைந்துவிடும்.
எனவே அந்த மாதிரி காதல் இல்லாமல்,

எப்போதுமே காதலுடன் (ரொமான்ஸாக) இருக்க சில வழிகள்:
1. காதல் என்பது ஒவ்வொருவரின் மனதைப் பொறுத்தது. அதிலும் காதல் சின்னங்களான ரோஜா, மெழுகுவர்த்திகள் மற்றும் சொக்லேட் மட்டுமே இதுவரை காதலில் ஒரு அறிகுறியை கொடுத்துள்ளது. உண்மையில் காதலிப்பவரை மகிழ்விப்பதற்கு, அவர்களின் காதல் உணர்வுகளைத் தூண்ட எது ஏதுவாயிருக்கும் என்று பாருங்கள். அவர்கள் எதை விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அவர்களின் காதலை வெல்ல அவர்களின் விருப்பங்கள், வெறுப்புகள் அறிந்து கொள்வது மிக அவசியம். மேலும் உங்களது உலகில் மற்றவரை விட அவர்கள் எத்தனை முக்கியமானவர் என்பதை நீங்கள் உணர ஆரம்பிக்கும் பொழுது, உங்கள் மனம் அவர் மீது அதிக கவனத்தை செலுத்தும். இவ்வாறு செலுத்தும் போது, அவர்களது ஒவ்வொரு செயலையும் ரசிக்கத் தோன்றும்.
2. நீங்கள் ஒருவர் மீது ஈர்ப்பு கொண்டு அந்த காதலை அவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும். மேலும் நீங்கள் அவர்களை கவர என்ன செய்ய வேண்டும்? நீங்கள் அவர்மீது ஆர்வம் கொண்டுள்ளீர்கள் என்பதை எப்படி வெளிபடுத்துவது? அவர்களை அன்பால் வெல்ல என்ன செய்ய வேண்டும்? என்பதை யோசிக்க வேண்டியது அவசியம். அவர்களின் அன்பு மற்றும் காதலை பெற முயற்சிக்க வேண்டும். நீங்கள் முன்னமே காதல் தோல்வி அடைந்தவரானால், அந்த தோல்வியைக் வெளிப்படுத்திக்கொண்டு ஒரு அனுதாபத்தை உண்டாக்கலாம். அப்படி செய்கையில் ஒரு காட்சியை உருவாக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் எத்தனை ஆசை வைத்திருந்தீர்கள், காதலில் எத்தனை நம்பிக்கை கொண்டிருந்தீர்கள் என்பதை விளக்கும் போது, உங்கள் மீது காதல் கொள்ள வாய்ப்பு உள்ளது.
3. காதல் செய்யும் போது ஆரம்பத்தில் எல்லாம் புதியதாக இருக்கும். ஆரம்பத்தில் உங்கள் காதல், உற்சாகத்தை மற்றும் உத்வேகம் கொண்டு, நீண்ட நாள் உறவைத் தொடர நினைக்கும். நீங்கள் ஒருவரை சந்தித்து அவர் மீது காதல் கொண்டு, மீண்டும் மீண்டும் அவரை சந்திக்க மனம் ஏங்கும் மற்றும் உங்கள் தொடர்பு நீடிக்க - நாளை என்ன நடக்கும்? அடுத்த வாரம் என்ன நடக்கும்? அடுத்த மாதம் என்ன நடக்கும்? அவர் உங்களை அழைப்பாரா? முத்தமிடுவாரா? அவர் வருவாரா? என்று பல உணர்ச்சிகளும் எதிர்ப்பார்ப்பும் நிகழும். இந்த உறவு உங்கள் வாழ்வில் ஒப்புக்கொண்ட பின், இது ஒரு வழக்கமான ஒன்றாக மாறிவிடும். அதனால் உங்கள் காதல் எப்போதும் புதிதான ஒன்றாக இருக்க வேண்டும் எனில், ஏதாவது புதிதாக செய்யுங்கள். ஆச்சரியப்படும்படி, எதிர்பார்க்கும்படி, அவர்களை என்றும் உற்சாகபடுத்தும் படி, அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினால், உங்கள் காதல் எப்போதுமே சிறப்பாக இருக்கும்.
4. காதல் என்பது ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் என்ற கட்டாயமோ அல்லது அது ஒன்றும் காசு கொடுத்து வாங்கும் விலை உயர்ந்த பொருளாகவோ அல்லது உயர்தரமானதாக இருக்க வேண்டும் என்பதோ இல்லை. உண்மையில், சில நேரங்களில், காதல் தருணங்கள் எளியதாகவும், மனதில் செய்ய வேண்டுமென்று தோன்றும் ஒரு உணர்வு. அதிலும் சில நேரங்களில் அந்த காதலை வெளிப்படுத்த "நான் உன்னை காதலிக்கிறேன்", "நான் உனது பிரிவால் வாடுகிறேன்" என்றெல்லாம் சொல்லி நம் உணர்ச்சியை வெளிப்படுத்தலாம். இல்லையெனில் அவர்களை மறைந்து நின்று பார்ப்பது, சத்தமாக காதலை சொல்வது, முத்தமிடுவது, கிண்டல் செய்வது, உணர்வை தொடும் வகையில் பேசுவது என்று காதலை வரம்பற்ற வழிகளில் வெளிப்படுத்தலாம். படைப்பாற்றல் மற்றும் வேடிக்கையாக செய்தல் மிகவும் அவர்களை ஈர்க்கும்!
5. வாழ்வில் நீங்கள் விரும்பியவரை பெருமைப்படுத்த அல்லது பாராட்ட, நீங்கள் உண்மையிலேயே அவர்களை உங்களோடு இருக்க செய்தல் வேண்டும். அவர்களை உங்கள் சொந்தமாக்கிக் கொள்ள, உங்களின் முழு முயற்சி எடுக்கும் பொழுது, அதில் அதிக சந்தோஷம் அடைவீர்கள். நீங்கள் ஒவ்வொரு நாளும் அவர்களை தொடர்ந்து பார்க்கும் போது, அதைவிட அற்புதமான சுழல் எதுவும் இல்லை. அவரை உங்களது வாழ்க்கை துணையாக அடைந்து உங்களின் அனைத்து உணர்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள, நீங்கள் கொடுத்து வைத்தவர் என்பதை மனமானது ஞாபகப்படுத்தி, மீண்டும் உங்கள் வாழ்க்கையில் காதலை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
இவையெல்லாம் சில அனுபவங்கள் தான். காதல் அனுபவிக்க வேண்டியது. போற்றப்பட வேண்டியது. வளர்க்கப்பட வேண்டியது. ஜாதி ஒழிந்து சமத்துவ சமுதாயம் மலர, மனிதநேயம் தழைக்க ஜாதி கடந்த காதல் திருமணங்கள் தேவை.
ஆகவே காதலர்களே...! காதலை காதலோடு காதலியுங்கள்.