திங்கள், 9 ஆகஸ்ட், 2010

திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில ஆலோசனைகள்

01. உங்களுக்கு திருமணம் நடந்த விடயத்தை திருமண நாள் அன்றோடு மறந்து விடுங்கள், உங்களுக்கு திருமணம் நடந்து விட்டது என்று தெரியாதவர்களுக்கு திருமணம் நடந்த விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம்.

02 . மனைவி பிள்ளைகளோடு வெளியில் செல்வதை தவிருங்கள்.

03. நீங்கள் எப்போதும் திருமணமாகாத இளம் நண்பர்களோடு மட்டுமே பழகுங்கள். அப்போது மற்றவர்கள் உங்களையும் திருமணமாகாத ஒருவர் என்று நினைத்து விடுவார்கள்.

04. எப்போதும் நாகரிகமான ஆடைகளை அணியுங்கள் அடிக்கடி இளம் பெண்கள் அதிகம் நடமாடும் இடங்களுக்கு சென்று உங்கள் வழமையான சில்மிசங்களை செய்யுங்கள்.

05. இளம் பெண்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது அந்தப் பெண்கள் உங்களிடம் உதவி கேட்காமலேயே நீங்களாகவே சென்று உதவி செய்யுங்கள். அப்போது அந்தப் பெண்ணின் மனதிலே இலகுவில் இடம் பிடிக்கலாம்.

06. சில காலம் குழந்தை பெறுவதை தவிர்க்க வேண்டும். காரணம் பிள்ளைகளின் தொல்லை அதிகமாகும் அப்போது வெளியில் நீங்கள் கல்யாணமானவர் என்பது தெரிய வரலாம். அப்போது இளம் பெண்கள் உங்களை கண்டாலே ஓடி விடுவார்கள்.

07. உங்கள் மனைவி வெளியில் சென்று வருவதற்கு ஒரு காரினையும் (மகிழுந்து) ஒரு சாரதியையும் ஏற்பாடு செய்து வையுங்கள். ( உங்கள் மனைவியை அந்த சாரதி ஏற்பாடு செய்தால் நான் பொறுப்பல்ல)

08. மூஞ்சி புத்தகத்தில் (face book) அதிகம், பெண் நண்பிகளை தேடிக்கொள்ளுங்கள்.அல்லது அதிகம் பெண் நண்பிகளை சேர்க்க துடிக்கும் சந்ரு போன்றோரின் ஆலோசனைகளைப் பெறுங்கள்.

09. திருமண, பிறந்தநாள் போன்ற விசேட நிகழ்வுகளுக்கு மனைவியுடன் செல்வதை தவிர்த்து தனியாக செல்லுங்கள். ஏல்லும்போது கம்பிரமான தோற்றத்தோடு செல்லுங்கள். அங்கேயும் பல இளம் பெண்களை கவர முடியும்.

10. இதுதான் மிக முக்கியமான ஒன்று ஏற்கனவே திருமணமான மூத்த பதிவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அவர்களது அனுபவத்துடன் கூடிய ஆலோசனைகளை பெறுங்கள்.

1 கருத்து:

  1. ஐயா, நீங்கள் அடுத்தவருடைய பதிவுகளை அவருடைய அனுமதியில்லாமல் பயன்படுத்துகிறீர்கள் என்று ஒருவர் கூறுகிறார். என்னுடைய பதிவிற்கு வாருங்கள். என்னுடைய எல்லாப் பதிவுகளையும் நீங்கள் எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம். எனக்கு நன்றியோ, வேறு எதுவுமோ வேண்டாம்.

    பதிலளிநீக்கு