செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும் ?


அண்மையில் இணையத்தில் உலாவும்போது ஒரு இணையதளத்துக்கு செல்ல கிடைத்தது. அது சோதிடம் சம்பந்தப்பட்ட ஒரு இணையதளம். எனக்கு சோதிடத்தில் பெரிதளவு நாட்டம் இல்லை என்றாலும் சிறிது உள்ளே சென்று மேலோட்டமாக பார்த்தேன். அவ்வாறு தேடுபோது தான் ஒரு சுவாரசிய விடயம் கிடைத்தது. அதை எனது வலை பதிவு வாசகர்களோடு பகிருகிறேன். அதாவது உங்கள் ராசிக்கும் காதலுக்கும் எப்படி பொருந்துகிறது என்பது தன. ஆனால் எனக்கு என்னுடைய ராசி என்ன என்பது தெரியாது...... எனவே எனக்கு பிரச்சினை இல்லை... தொடருங்க...



மேஷம்:
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வார். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்காமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கபடுவார்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கைதேர்ந்தவர்களாக இருப்பார். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்பு துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பார்கள். மிதுன ராசிக்காரர்கள் தங்களை தாங்களே ரசிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிகாரர்களுக்கு துலாம் ராசிகாரர்களுடன் நல்ல தாம்பத்தியம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேடை ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்:
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் குழந்தைகள், உறவினர்கள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்தியத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிகாரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:
சிம்ம ராசிகாரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உண்டு. இவர்களது இதயத்தில் பல விடயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்கமாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றயவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக்கொள்ளமாட்டர்கள். ரொமாண்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசி பெண்கள் தங்களுடைய கணவருடன் இனிமையான காதல் வாழ்கையை வாழ்வார். சிம்ம ராசிக்காரர்கள் யாரை வேண்டுமானாலும் தன பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுபாட்டிட்குள்ளும் வைத்திருப்பார். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்படமாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.

கன்னி:
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுவர். காதலையும், அன்பையும் உடலளவில் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விடயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குணம் உடையவர்கள். அனால் இந்த குணம் உள்ளவர்கள் இலட்ச்சியத்தை கடைபிடிக்கமாட்டர்கள். இவர்களுக்கு அன்புசன்தொசத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷத்தில் வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரகூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்:
எப்போதும் அடாவடியாக பேசிகொண்டிருக்கும் இவர்கள் யாரும் எதிர்கொள்ளத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்ததல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குனமிருக்கது. விருச்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிக சிறப்பாக இருக்கும்.


விருச்சிகம்

விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பலகுபவர்களிடமுள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக்கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னை பார்க்க வேண்டுமென நினைப்பதால் இவருக்கு காதல் என்பது ஒரு எட்டாத கனியாகதான் இருக்கும். இவர்களது வயது ஆகா ஆகா காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பவராகவும் இருப்பார். எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றும் தாம்பத்திய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் அதிலிருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுதும் சந்தோசமாகவும், அமைதியாகவும் இருப்பார்.

தனுசு
இவர்கள் காதல் வெற்றியடையும். காதலில் திறமைசாலியாக இருப்பார்கள். இவர்களது இலட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றியடைய அதிகம் கஷ்டபடுவர். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும் பகுதியை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவர். காதல் எண்ணம் அதிகமாக இருக்கும். துணையை வெகுவாக விரும்புவர். அவரின்பால் அதிக அன்பை செலுத்துவர். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிகாரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிகாரர்களுடன் காதல் வயப்பபடுவர்.

மகரம்
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்கமாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவார். தனுசு ராசிகாரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிகாரர்களுக்கு காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலர்களாக இருப்பார். ஆனால் காதல் தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலை பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பார். இவர்களது கற்பனை வித்தியாசமாக இருக்கும். புரிந்துகொள்வதும், புரிந்து வைத்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிகாரர்களுக்கு எதிர்பாலாருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்
மீனா ராசிகாரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களது வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருக்கும். மீன ராசிக்காரர்களின் சுபாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிகாரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் செய்து முடிப்பர். இந்த ராசிக்காரர் உணர்ச்சியை தரக்கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்க முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிகாரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில வழிகள்.



01. உங்களுக்கு திருமணம் நடந்த விடயத்தை திருமண நாள் அன்றோடு மறந்து விடுங்கள், உங்களுக்கு திருமணம் நடந்து விட்டது என்று தெரியாதவர்களுக்கு திருமணம் நடந்த விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம்.

02 . மனைவி பிள்ளைகளோடு வெளியில் செல்வதை தவிருங்கள்.

03. நீங்கள் எப்போதும் திருமணமாகாத இளம் நண்பர்களோடு மட்டுமே பழகுங்கள். அப்போது மற்றவர்கள் உங்களையும் திருமணமாகாத ஒருவர் என்று நினைத்து விடுவார்கள்.

04. எப்போதும் நாகரிகமான ஆடைகளை அணியுங்கள் அடிக்கடி இளம் பெண்கள் அதிகம் நடமாடும் இடங்களுக்கு சென்று உங்கள் வழமையான சில்மிசங்களை செய்யுங்கள்.

05. இளம் பெண்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது அந்தப் பெண்கள் உங்களிடம் உதவி கேட்காமலேயே நீங்களாகவே சென்று உதவி செய்யுங்கள். அப்போது அந்தப் பெண்ணின் மனதிலே இலகுவில் இடம் பிடிக்கலாம்.

06. சில காலம் குழந்தை பெறுவதை தவிர்க்க வேண்டும். காரணம் பிள்ளைகளின் தொல்லை அதிகமாகும் அப்போது வெளியில் நீங்கள் கல்யாணமானவர் என்பது தெரிய வரலாம். அப்போது இளம் பெண்கள் உங்களை கண்டாலே ஓடி விடுவார்கள்.

07. உங்கள் மனைவி வெளியில் சென்று வருவதற்கு ஒரு காரினையும் (மகிழுந்து) ஒரு சாரதியையும் ஏற்பாடு செய்து வையுங்கள். ( உங்கள் மனைவியை அந்த சாரதி ஏற்பாடு செய்தால் நான் பொறுப்பல்ல)

08. மூஞ்சி புத்தகத்தில் (face book) அதிகம், பெண் நண்பிகளை தேடிக்கொள்ளுங்கள்.அல்லது அதிகம் பெண் நண்பிகளை வைத்திருக்கின்ற ஆதிரை போன்றோரையும், அதிகம் பெண் நண்பிகளை சேர்க்க துடிக்கும் சந்ரு போன்றோரின் ஆலோசனைகளைப் பெறுங்கள்.

09. திருமண, பிறந்தநாள் போன்ற விசேட நிகழ்வுகளுக்கு மனைவியுடன் செல்வதை தவிர்த்து தனியாக செல்லுங்கள். ஏல்லும்போது கம்பிரமான தோற்றத்தோடு செல்லுங்கள். அங்கேயும் பல இளம் பெண்களை கவர முடியும்.

10. இதுதான் மிக முக்கியமான ஒன்று ஏற்கனவே திருமணமான மூத்த பதிவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அவர்களது அனுபவத்துடன் கூடிய ஆலோசனைகளை பெறுங்கள்.

இந்த பதிவுக்கான கருப்பொருளை எனக்கு வழங்கிய பதிவு வந்தி அண்ணாவின் பதிவுதான் அங்கேயும் சென்று பாருங்கள்.

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

காதலில் உங்கள் குணம் எப்படி இலகுவாக அறியும் வழிகள் உங்களுக்காக


காதலில் உங்கள் குணம் எப்படி என்று இலகுவாக அறிந்து கொள்ளலாம். நீங்களும் காதலிக்கின்றிர்களா, அல்லது உங்கள் நண்பர்கள் காதலில் என்ன குணம் என்று அறிய ஆவலா? இலகுவாக பிறந்த திகதியை வைத்து அறியலாம்.

உ+ம் 2.2.1969 2+2+1+9+6+9+=29 இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 2+9=11 1+1=2 இதுதான் இவருடைய காதல் எண் {love number}

லவ் நம்பர் ஒன்று ==>>சின்னம் ==>மான்

பெண்ணுக்குரிய குணம் ==>> வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர் வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்பவர் அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள் லட்சியப்போக்கும்,சாதுர்யமும்,நகைச்சுவையும் நிரம்பியவர்

ஆணுக்குரிய குணம் ==>> காதல் கல்யாணத்தில் நிறையத் தோல்வி jgகாண்பீர்கள் ஆனால் நீங்கள் மனைவியிடத்தில் விசுவாசத்தோடும்,பெருந்தன்மையோடும்,நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள் படுக்கையில் மனைவி நல்ல ஒத்துழைப்பை அளிப்பாள் மனைவியின் நடத்தையைக் கலர் கண்ணாடி கொண்டு பார்க்காமல் இருந்தால்,வாழ்க்கை சொர்க்கம்தான் மண்டைகனத்தையும் தவிர்த்தால் எல்லாம் இன்பமயம்

லவ் நம்பர் இரண்டு ==>> சின்னம் ==>> பட்டாம்பூச்சி
பெண் ==>> கணவர் எள் கொண்டு வா என்றால் எண்ணெய் இதோ என்று சொல்லும் சுபாவம் உடையவர்.அடிக்கடி உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டாற்சிணுங்கி நீங்கள் உங்கள் ஒவ்வொரு பணியையும்,உங்கள்அலங்காரத்தையும்,உங்கள் கணவர்{அ} காதலர் வாய் நிறைய மெச்ச வேண்டுமென்று எதிர்பார்பவர் நீங்கள் நல்ல நகைச்சுவை நிரம்பியவர் நீங்கள் இருக்குமிடத்தில் சதாசர்வ காலமும் கலகலப்புத்தான்.

ஆண் ==>> நீங்கள் ஒரு காதல் மன்ன்ன அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத்தவறமாட்டீர்கள் மனைவியின் உடல் சுகத்தைப்பெற சந்திரனைக்கூட கையில் பிடிக்க முயல்வீர்கள்.ஆனாலும் கொஞ்சம் பொறாமைக் குணம் உண்டு.

லவ் நம்பர் மூன்று ==>> சின்னம் ==>>மீன் தின்னி பிராணி}{otter}

பெண் ==>> ஆண்மை நிறைந்தவன்னையே எதிர்பார்பீர்கள்,அழகுகூட இரண்டாம் பட்சம்தான்.நாகரீகத்தை எதிர்பார்பீர்கள்,வீட்டுப் பணியுடன்,வெளிப்பணியையும் திறம்பட வகிக்கக் கூடியவர் உச்சிமீது வானிடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாட்டுக்கு இலக்கணம் நீங்களேதான்.

ஆண் ==>> ஓர் உத்தம புருஷனின் கல்யாணகுணங்கள் அத்தனையும் பொருந்தியவர் எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன் எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்வார் சுவையான பேச்சாளர் பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்

லவ் நம்பர் நான்கு ==>> சின்னம் ==>> தேனீ

பெண் ==>> உங்களை நேசிப்பவரிடம் விசுவாசமாகவும்,நன்றியுள்ளவராகவும்,அனுசரணையுள்ளவராகவும்,இருப்பீர்கள்.நீங்கள் இருக்குமிடத்தில் கும்மாளமும் வேடிக்கையும் ,சிரிப்புந்தான்.

ஆண் ==>> நீங்கள் உணர்ச்சிவசப்படும் டைப் முன் யோசனையுடையவர் குழந்தைகளையும்,மனைவியையும் அதிகமாக நேசிப்பவர். விசாலமனமும்,பெருந்தன்னையும் நிறைந்தவர்.உங்கள் மனதை பறிகொடுத்தவருக்காக உயிரைக் கூட தியாகம் செய்யத்தயங்காதவர்.பரிபூரண சுதந்திரத்தை வழங்குபவர்.உங்களைக் கணவராக அடைய ரொம்ப கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

லவ் நம்பர் ஐந்து ==>> சின்னம் ==>> குருவி

பெண் ==>> பெண்மை பரிபூரணமாக குடிகொண்டுள்ளவர்.

இவரை மனைவியாக அடையப்போகிறவர்கள் ரொம்பவும் அதிஷரசாலிதான் உலகை ஒரு சுற்றுசுற்றிவர,பேராசை கொண்டவர் யாராவது சுவையாகச் சமைத்து வைத்தால் நாக்கை நொட்டை விட்டுக்கொண்டு சாப்பிடத் தயாராகும் உங்களுக்கு

சமையல்.வீட்டுவேலையெண்றால் எட்டிக்காய்தான் இவளை மனைவியாக அடைந்த நான் சந்தேகமில்லாமல் பாக்கியசாலிதான் என்று உங்கள் கணவர் நினைக்கும் அளவுக்கு நீங்கள் ஐர்க்பாட்.

ஆண் ==>> பெண்களிடையே நீங்கள் ரொம்பவும் பாப்புலர் டைப் உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம் உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும்,அளிக்கலாம் ,ஆனந்த்ததையும் அளிக்கலாம் உங்களுக்கு வாழ்கை ஒரு சவால்தான்! .

லவ் நம்பர் ஆறு ==>> சின்னம் ==>> வாத்து

பெண் ==>> குப்பை மேட்டைக்கூட கோவிலாக்கும் கலைநயம் படைத்தவர் என் கணவர்,என் கு்ழந்தைகள்ளாதான் உலகம் என்று வாழ்ந்து காட்டக் கூடிய உண்மையான தாய் நீங்கள் அதது அதனிடத்தில் இருக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டுவீர்கள். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற கொள்கையால் கணவனைத் திக்குமுக்காட வைப்பீர்கள் ஓர் ஆதர்ச மனைவி என்பதற்கு உண்டான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் .

ஆண் ==>> காதல் பவித்திரமானது,பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர் உடலைக் காயப்படுத்தக் கூட உங்கள் மனம் இடம் கொடுக்காது. அழகை ஆராதனை செய்யும் அதே சமயத்தில் கவிதைகளையும் எழதித் தள்ளுவீர்கள் மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற வாசகம் உங்களுக்காகவேதான்.

லவ்நம்பர் ஏழு ==>> {சின்னம் ==>>ஆந்தை}

பெண் ==>> உடுப்பது,உண்பது,பேசுவது,காதலிப்பது எல்லாமே ஏனோதானோதான். பணம்,பதவி,பகட்டு எல்லாமே உங்களுக்கு அனாவசியம்தான்....சராசரிப் பெண்ணின் ஆபாசங்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கும் ஆபூர்வப்பிறவி நீங்கள் எந்த ஒரு விக்ஷயத்திலும் கட்டுப்பாடற்ற தனிக்காட்டு ராணி நீங்கள் வெளிவேக்ஷம் போடத்தெரியாத வெகுளிடைப் நீங்கள் மற்றவர்களின் கருத்து திணித்தலை ஒதுக்கி தன்னிச்சையாக நீங்கள் செயல்படும்பொழுது அடங்காப்பிடாரி என்ற பட்டத்தைப் பெறுவீர்கள்.

ஆண் ==>>சதாசர்வகாலமும் கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கும் டைப் அதோடு புத்தகமும் கையுமாய் காரணகாரியத்தில் ஆராய்ச்சில் மூழ்கிவிடுவீர்கள். ஒரு பெண் உங்களைக் காதலிக்க நேர்ந்தாலும் அவள் என்னை ஏன் காதலித்தாள்,எந்த அம்சம் பிரதானம் ,எந்த அடிப்படையில் காதலித்தாள் என்ற ஆராய்ச்சியில் மூழ்கி,அனுபவிக்க வேண்டியதையெல்லாம் கைநழுவ விட்டுவிடுவீர்கள்.திருமணவாழ்கை வெற்றியடைவது அதிக்ஷடத்தைப் பொறுத்த்து.

லவ்நம்பர் எட்டு ==>> சின்னம் ==>>எறும்பு

பெண் ==>> களைபொருந்திய,கவர்ச்சி நிரம்பிய முகம் முதல் சந்திப்பில் நீங்கள் திமிர்பிடித்தவர் போல் பழகுவீர்கள்,ஆனால் பழகப்பழகத்தான் நீங்கள் இனியவர் என்று நிரூபிப்பீர்கள். இக்ஷடப்பட்டதை அடையத்தவறமாட்டீர்கள்.அதிகாரமும்,பணமும் உள்ளவரைத் தான் நீங்கள் தேர்தெடுப்பீர்கள் நீங்கள் உணர்ச்சிவசப்படும்பொழுது ஒருவரை இமயமலையின் உச்சியில் கொண்டு உட்காரவும் வைப்பீர்கள். அல்லது அவரை அதலபாதாளத்திலும் தள்ளுவீர்கள்.

ஆண் ==>> காதலுக்காக ,சாம்ராஐயத்தை இழந்த வின்ஸ்டர் கோமகனை உங்களுக்கு ஒப்பிடலாம் நல்ல தாம்பத்தியத்துக்கு நந்தியாக நிற்பது உங்களின் பொறாமைக்குணம்தான் சமூக‌அந்தஸ்திலும், பொருளாதார மட்டத்திலும் உயர்ந்து நிற்கும் நீங்கள் சொர்க்க வாழ்க்கை அடைவீர்கள். வெற்றிகளும்,தோல்விகளும் அடுக்கடுக்காக எதிர்பட்டாலும்,சிறிதும் மனம் தளராமல் லட்சியவாதியாகச் செயல்பட்டு வெற்றியின் சிகரத்தை எட்டிப்பிடித்திடுவீர்கள்.நீங்கள் பிறக்கும்பொழுதே சாமர்தியமும்,புத்திசாலித்தனமும் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் வெற்றித்திருமகனாக விளங்குவதில் வியப்பில்லை.

லவ் நம்பர் ஒன்பது ==>>சின்னம் ==>>கீரிப்பிள்ளை

பெண் ==>> இவளுடன் சேர்ந்து வாழும் வாழ்கைதான் சொர்க்கம் ,என்று துணைவர் கூறும் அளவுக்கு நீங்கள் சலிப்பைத் தராதவர் காதல் உணர்ச்சி மிக அதிகமாக உள்ளவர் பள்ளி நாள் நட்பையும், பள்ளியறை நட்பையும் எப்பொழுதும் நிறுத்திக் கொள்பவர்.

ஆண் ==>>உங்களது ஏகபத்தினி விரதத்துக்கு பங்கம் ஏற்படுத்த அநேக சூழ்ச்சிகள் வீசப்படும் கவனம் தேவை விசுவாமித்திரர்_மேனகையை நினைவில் கொண்டு உங்கள் வாழ்கைத் துணையை எல்லா வகைகளிலும் திருப்தி செய்வீர்கள். எறும்பின் சுறுசுறுப்போடும்,லட்சியத்தோடும்,உறுதியோடும் செயல்பட்டு அடையவேண்டியதெல்லாம் அடைவீர்கள் எந்தப் பணியை ஒப்படைத்தாலும் திறம்பட நிர்வகித்து நல்ல நிர்வாகி என்ற பாராட்டைப் பெறுவீர்கள்.அரசியலில் நுழைந்தால் மக்கள் அபிமானத் தலைவனாக்க கொடிகட்டிப் பறக்கலாம்.

ஆதாரம் _the book of love

பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்



பெண்கள் ஆண்களை தன் பின்னால் அலைய வைப்பது எப்படி

01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.

02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.

03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.

04 . நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள்.

05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது ஹாய் மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம்.

10 . இதுதான் முக்கியமானது.... எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில ஆலோசனைகள்

01. உங்களுக்கு திருமணம் நடந்த விடயத்தை திருமண நாள் அன்றோடு மறந்து விடுங்கள், உங்களுக்கு திருமணம் நடந்து விட்டது என்று தெரியாதவர்களுக்கு திருமணம் நடந்த விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம்.

02 . மனைவி பிள்ளைகளோடு வெளியில் செல்வதை தவிருங்கள்.

03. நீங்கள் எப்போதும் திருமணமாகாத இளம் நண்பர்களோடு மட்டுமே பழகுங்கள். அப்போது மற்றவர்கள் உங்களையும் திருமணமாகாத ஒருவர் என்று நினைத்து விடுவார்கள்.

04. எப்போதும் நாகரிகமான ஆடைகளை அணியுங்கள் அடிக்கடி இளம் பெண்கள் அதிகம் நடமாடும் இடங்களுக்கு சென்று உங்கள் வழமையான சில்மிசங்களை செய்யுங்கள்.

05. இளம் பெண்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது அந்தப் பெண்கள் உங்களிடம் உதவி கேட்காமலேயே நீங்களாகவே சென்று உதவி செய்யுங்கள். அப்போது அந்தப் பெண்ணின் மனதிலே இலகுவில் இடம் பிடிக்கலாம்.

06. சில காலம் குழந்தை பெறுவதை தவிர்க்க வேண்டும். காரணம் பிள்ளைகளின் தொல்லை அதிகமாகும் அப்போது வெளியில் நீங்கள் கல்யாணமானவர் என்பது தெரிய வரலாம். அப்போது இளம் பெண்கள் உங்களை கண்டாலே ஓடி விடுவார்கள்.

07. உங்கள் மனைவி வெளியில் சென்று வருவதற்கு ஒரு காரினையும் (மகிழுந்து) ஒரு சாரதியையும் ஏற்பாடு செய்து வையுங்கள். ( உங்கள் மனைவியை அந்த சாரதி ஏற்பாடு செய்தால் நான் பொறுப்பல்ல)

08. மூஞ்சி புத்தகத்தில் (face book) அதிகம், பெண் நண்பிகளை தேடிக்கொள்ளுங்கள்.அல்லது அதிகம் பெண் நண்பிகளை சேர்க்க துடிக்கும் சந்ரு போன்றோரின் ஆலோசனைகளைப் பெறுங்கள்.

09. திருமண, பிறந்தநாள் போன்ற விசேட நிகழ்வுகளுக்கு மனைவியுடன் செல்வதை தவிர்த்து தனியாக செல்லுங்கள். ஏல்லும்போது கம்பிரமான தோற்றத்தோடு செல்லுங்கள். அங்கேயும் பல இளம் பெண்களை கவர முடியும்.

10. இதுதான் மிக முக்கியமான ஒன்று ஏற்கனவே திருமணமான மூத்த பதிவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அவர்களது அனுபவத்துடன் கூடிய ஆலோசனைகளை பெறுங்கள்.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

காதல் இனிமையானதுதான் அதை மறுப்பதற்கில்லை... இளவயது காதல் எதனால் உண்டாகிறது?


காதல் புனிதமானது அது எந்த சூழ்நிலையிலும் எந்த வயதிலும் வரக்கூடிய ஒரு மெல்லிய உணர்வு. இன்று நம்மில் பலர் தவறாக எண்ணிக் கொண்டுள்ளோம். இளம்வயதில் அதாவது படிக்கும் பருவமான டீன்ஏஜ் பருவத்தில் வருவதுதான் காதல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். காதல் உயிரின் ஜனனம் முதல் மரணம்வரை தொடரும். காதல் என்பது ஒரு உயிர் உருவாவதற்கு முன்னரே காதல் வந்துவிடுகிறது.

உதாரணத்துக்கு ஒரு தாய் தன்வயிற்றில் கரு உண்டான உடனே தன்குழந்தையின் மேல் அதீதபாசம் கொண்டுவிடுகிறாள். பெற்றோர்கள் தன் குழந்தையை நேசித்து அப்பொழுதே காதலாகி கனவுகாண தொடங்கிவிடுகிறார்கள். பெற்றோர் தன் குழந்தையின்மீது உண்டான பாசமும் காதல்தான். பிள்ளை பெற்றோரின்மேல் கொண்ட பாசமும் காதல்தான். இப்படி எதுஎதன் மேல் அன்பு செலுத்துகிறோமோ அதெல்லாம் காதல் தான்.

காதலில் அன்பு, பாசம், நேசம், ஆசை, விருப்பம் இதெல்லாம் அடங்கிவிடுகிறது. நம்மவர்கள் இளம்வயதில் வருவதுதான் காதல் என்று காதலை கொச்சைப்படுத்துகிறார்கள். இளவயது காதல் எதனால் உண்டாகிறது என்றால் பையனோ பெண்ணோ தன்னுடன் படிக்கும் அல்லது தன்னுடன் பணிபுரிபவர்களிடமோ வருகிறகாதல். ஒருவர்மேல் ஒருவர் ஈர்க்கப்பட்டு அவர்களின் செயல்பாடுகள் கவரும்படியாக அமைந்துவிட்டால் அங்கே இருவருக்கும் காதல் உருவாகிவிடுகிறது. அவன்/அவள் செய்யும் சின்னசின்ன நடவடிக்கைப் பிடித்துபோய் இவர்கள்தான் நம்மீது உண்மையான அன்பு செலுத்துகிறான்/ செலுத்துகிறாள் என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது.

இருவரின் மனங்களும் ஒத்துப்போய் அன்பு செலுத்துவதினால் காதல் ஏற்பட்டுவிடுகிறது. இதனால்தான் இன்று நிறைய காதல் திருமணங்கள் பெருகிவருகின்றன. இதற்கு இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் காதல் திருமணங்களை அங்கீகரிப்பதில்லை. தாங்கள் இருபது வருடங்களாக தங்கள் பிள்ளைகள் பொத்திபொத்தி வளர்த்தபின் எங்கிருந்தோ வந்த முன்பின் பழக்கமில்லாத இன்னொருவனுடன்/இன்னொருவளுடன் காதல் என்றுவரும்போது மனம் ஏற்கமறுக்கிறது. எங்கே தங்கள் பிள்ளைகள் வழிமாறி சென்று வாழ்க்கையில் கஷ்டப்படுவார்கள் என்ற கவலையில்தான் பெற்றோர்கள் காதலை ஏற்கமறுக்கிறார்கள். இதுதான் உண்மை.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள்மீதான கனவில் களங்கம் வரும்போது அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. மனம் வேதனைப்படுகிறது. ஆனால் காதலர்கள் இதை அலட்சியம் செய்து பெற்றோர்களின் மனதை புரிந்துகொள்வதில்லை. சிறிது காலம் சென்றபின் காதல்வாழ்க்கை கசந்தபின் திரும்பிவரும்போது பெற்றோர்கள் மன்னித்து சந்தோசத்துடன் அவர்களை ஏற்றுக்கொளும்போது இழந்ததை மீட்ட சந்தோசம் வந்துவிடுகிறது.

இந்தமாதிரி சூழ்நிலையை தவிர்க்க பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்க்கிறார்கள். இதையும் மீறி பிள்ளைகள் தவறான வழியில் சென்றுவிடுகிறார்கள். இதுமாதிரி நடக்காமலிருக்க பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உண்மைநிலையை தெளிவாக விளக்கவேண்டும். ஒரு நல்ல நண்பனைப்போல அவர்களோடு மனம்விட்டு பேசவேண்டும். இதெல்லாம் இப்போது சரியாகத் தோன்றும்; பின்னால் இப்படி நடந்தற்காக நாம் நிறைய வருத்தப்படவேண்டி வரும் என்று புரியவைக்க வேண்டும். அப்போதுதான் வழி தவறமாட்டார்கள். பிள்ளைகளும் நம் வாழ்க்கைக்கு தேவையானதை நிதானமாக சிந்தித்து சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதனால்தான் இளம்வயதில் வ‌ரும் காதலை வேண்டா வெறுப்பாக எல்லோரும் நினைக்கிறார்கள். திருமணத்துக்கு பின் வரும் காதல் என்றென்றும் அழியாதது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கை ரொம்ப அர்த்தமுள்ளதாகும். காதல் நமக்குள் வரும்போது சாதிமத பேதங்கள் நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிடும். அன்பால் எதையும் சாதிக்கலாம். வன்முறைகள் எதுவும் நடக்காது. இது தெரியாமல் ஒவ்வொருகொருவர் சண்டையிட்டு மடிகிறார்கள். இந்த உலகில் காதலிக்காதவர்கள் இருக்கவே முடியாது. மனிதர்களுக்கு மட்டுமின்றி ஒவ்வொரு உயிருக்கும் காத‌ல் உண்டு.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.

காதலால் தவறான பாதையில் மனம் செல்லாது. காதல் நியூட்ட‌னின் முதல் விதியைப் போல..

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றமுடியும்.

இதுபோலதான் காத‌லும். காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துங்கள்.