|
தலைப்பைச் சேருங்கள் |
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க பலவற்றை நாம் கையாளுகின்றோம். பெரும்பாலோனோர் தங்களின் வாழ்க்கை துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்த்து, அதோடு நின்றும் விடுகின்றனர். ஆனால் அது மட்டும் போதாது என்பதை, திருமணத்திற்கு பின்னர் அனுபவத்தின் மூலம் பலரும் புரிந்து கொள்கின்றனர். நம்மில் பலர் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது செய்யும் பெரிய தவறு, நம் வாழ்க்கைத் துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்ப்பது தான். ஆனால் மற்ற நல்ல அம்சங்கள் மற்றும் அவர்களின் இதர குணங்களை கவனிப்பதில்லை. அதற்காக வாழ்க்கைத் துணையின் தோற்றத்தை மட்டும் பார்த்து, இவர் தான் உங்களுக்கு ஏற்றவர் என்று கூறுவது தவறல்ல.
ஆனால் அது மட்டுமே எல்லாம் என்றாகி விடாது. ஆகவே வெறும் வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து எப்போதும் வாழ்க்கை துணையை தேட கூடாது. ஏனெனில் அது ஒரு சிறு சதவீதம் மட்டுமே. இப்போது வாழ்க்கை துணையாக வருபவரிடம் என்னென்ன நல்ல பண்புகள் இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள கீழே படித்து பாருங்கள்.
நீங்கள் நீங்களாகவே இருப்பதனால் உங்களை விரும்புவார்கள்
நீங்கள் நீங்களாக இருக்கும் போதே, உங்களை விரும்பினால், அது வாழ்க்கை துணையின் நல்ல பண்பாகும். ஏன் இதை கூறுகிறோம் என்றால், சில பேர் தன் வாழ்க்கை துணை நல்லதை செய்தால் மட்டுமே விரும்புவார்கள். தங்கள் வாழ்க்கை துணையின் மற்றொரு முகத்தை காண அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் இதுவே நல்ல பண்புள்ள வாழ்க்கை துணையாக இருந்தால், நீங்கள் எப்படிபட்டவராக இருந்தாலும் உங்களை விரும்புவதோடு, கஷ்ட காலங்களில் உங்களுக்கு தோள் கொடுப்பார்.
தன் வார்த்தையை காப்பாற்றுவார்கள்
நல்ல வாழ்க்கை துணை கஷ்ட காலங்களின் போது நழுவாமல் இருப்பதோடு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள், அது தொலைபேசியில் அழைப்பதாகட்டும் அல்லது வெளியில் அழைத்து செல்வதாகட்டும். ஒருவேளை கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாவிட்டால், அதற்கான பொறுப்பான காரணத்தை தெரிவிப்பாரே தவிர, சிறு பிள்ளைத்தனமான காரணத்தைக் கூறமாட்டார்கள்.
பக்கபலமாக இருத்தல்
ஒரு நல்ல வாழ்க்கை துணை, உங்களின் வளர்ச்சியை நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள். அந்த புரிதல் குடும்ப உறவை மீறி, உங்களின் அலுவலக முன்னேற்றத்திலும் கூட. மேலும் உங்களின் வெற்றியை அவருடைய சாதனையாக கருதுவார். அதுமட்டுமல்லாமல், உங்களின் வெற்றிக்கு உங்களை ஊக்கப்படுத்த முற்படுவார்.
தன் காதலை காலநேரம் பார்க்காமல் வெளிகாட்டுவார்கள்
ஒரு நல்ல துணை என்பவர், கால நேரம் எதுவும் பார்க்காமல், தன் காதலை வெளிப்படுத்துவார்கள். மேலும் தன் காதலை உடனுக்குடன் வெளிப்படுத்துவார்கள். அதுமட்டுமின்றி, இந்த உலகத்திலேயே மிகவும் அழகானவராக, வசீகரமுள்ளவராக, தனித்தன்மை உள்ளவராக உங்களை கருதுவார்கள். மற்ற அழகான நபரை கண்ட போதிலும், அவர் மனதில் நீங்கள் மட்டும் தான் குடி கொண்டிருப்பீர்கள்.
பொறுமையுள்ளவராக இருப்பார்கள்
ஒரு உண்மையுள்ள வாழ்க்கைத் துணை, எப்போதும் அவருடன் இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்யமாட்டார்கள். அப்படிப்பட்ட காரியங்களிலும் அவர்கள் ஈடுபடமாட்டார்கள். மேலும் எப்போதும் வலுக்கட்டாயப்படுத்தாமல், உங்கள் மனதை கவர, அவர்களின் காதலை நீங்கள் புரிந்து கொள்ளுமாறு நடந்து கொள்வார்கள்.
தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்வார்கள்
ஒரு நல்ல வாழ்க்கைத் துணை என்பவர், தங்கள் தவறுகளை ஒப்புக் கொண்டு அதற்காக உடனடியாக மன்னிப்பும் கோருவார்கள். இதுவே தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளாமல், உங்கள் மீது பழியை போட நினைப்பவர் வாழ்க்கை துணையாக வந்தால், கண்டிப்பாக அவர் உங்களுக்கு ஏற்றவராக இருக்க முடியாது.
உங்களுக்காக எப்போதும் நேரம் ஒதுக்குபவராக இருப்பார்கள்
எவ்வளவு தான் வேலைப்பளு இருந்தாலும் சரி, ஒரு நல்ல வாழ்க்கை துணை உங்களுக்காக தன் நேரத்தை ஒதுக்க தவறமாட்டார்கள். “சாரி, வேலையில் பிசியாக இருந்து விட்டேன்” என்ற வாக்கியத்தை நல்ல வாழ்க்கை துணையிடம் இருந்து எப்போதும் கேட்கவே முடியாது. ஏனென்றால் அவர் உங்களுடன் இருந்தால், மலையை அசைக்கலாம், கண்டம் விட்டு கண்டம் தாண்டலாம், நாடு விட்டு நாடு பறக்கலாம் என்ற எண்ணங்கள் அவருக்கு ஏற்படும் என்பதால் தான்.