திங்கள், 30 மே, 2011

காதலில் தோல்வி என்றால் என்ன செய்வது..?

காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் முடிக்காமல் நாமே நம்மை அழித்துக்கொள்வதா..?
எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே..



மீண்டும் பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு நபர் யாரும் இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும்.

காதல் தோல்விக்காக சிலர் தற்கொலை செய்கிறார்களே என்ன செய்வது?.....!!!
இவ்வுலக வாழ்வு என்பது ஓர் இனிய வரம். இந்த அழகான பூமி, அழகான மாந்தர், அற்புத வாழ்க்கை எல்லாம் கிடைப்பது சாதாரண விஷயமல்ல. இதனை முழுவதுமாய் அனுபவித்து வாழவேண்டும்.

சிறப்பாய் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் காதல். காதல் இல்லை என்றதும் உலக வாழ்வே வேஸ்ட் என தன்னைத்தானே அழித்துக் கொள்பவர்களுக்கு பிறரால் எதனைத்தான் எடுத்துக்கூற முடியும்.? அவர்களது மனம் எதையும் ஏற்றுக்கொள்ளும் தன்மையில் இருப்பது என்பது உண்மைதான். ஆனால் நடைமுறை வாழ்க்கை பற்றி சிந்திக்கும் போதுவாழ்வின் உண்மைத்தன்மையும் தமது நிலைக்குமான வித்தியாசம் தெளிவாக புரியும்.

காதலில் வெற்றியடைந்தவர்கள் அடுத்ததாக திருமணம், குழந்தை, படிப்பு என எதிர்காலத்தை யோசித்து காதலை பெரும்பாலும் தொலைத்துவிடுவார்கள்.

ஆனால் காதலில் தோற்றவர்கள் அதனை வாழ்நாள் முழுவதும் மறப்பதே இல்லை. மனதிற்குள் ஒரு தாஜ்மகால் கட்டி அங்கே தோற்கப்பட்ட காதலை பூஜித்து வருவார்கள்.

ஒரு வகையில் காதலில் தோல்வி என்பதும் சுகமான அனுபவமே. நீங்கள் விரும்பிய ஒரு நபர் கிடைத்துவிட்டால் அவர் மீதிருந்த ஆசை, ஆர்வம், அன்பு எல்லாமே குறைந்துபோய்விடலாம். உங்களுக்குத் தெரியாமல் அவரிடம் சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் இருக்கலாம். இவை எதுவுமே இல்லாமல் உங்கள் மனதில் பரிசுத்தமாக இருக்கக்கூடியது காதல் தோல்வி.

காதலில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் எப்போது காதலிக்கத் தொடங்குவது என சிலர் கேட்பார்கள். காதல் என்பது சுவாசம் மாரிரி, ஒரு நொடியும் சும்மா இருக்கக்கூடாது. அதனால் ஒரு காதல் முடிந்துவிட்டால், உடனடியாக அடுத்த காதலை தொடரலாம். அல்லது உங்கள் மனம் சமாதானமான பின் தொடரலாம். “மாறுதல் என்பது தான் என்றும் மாறாத ஒரு விடையமாம்.” எனவே நீங்கள் சற்று மாறிக்கொள்வது தான் உங்கள் எதிர்காலத்தை பிரகாசிக்கச் செய்யும்.

திங்கள், 23 மே, 2011

பெண்ணுக்குள் இருக்கும் அதிசயம்


அழகில் சிறந்தவர்கள், ஆண்களா? பெண்களா?, தாம்பத்ய ஆசை யாருக்கு அதிகம்?, பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?, ஆண்கள் எந்த விஷயத்தில் கோட்டைவிடுகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்துகொள்ள ஆர்வமா?

உளவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சில அடிப்படை உண்மைகள் இங்கே...

* பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறாமல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.

* ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.

* குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் சொல்லிவிட்டு மறந்துவிடுவார்கள்.

* ஆண்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக்கும். சுயநலவாதிகள். ஆனால் பெண்களுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்.

* உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர்களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.

* ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வேண்டும். கூடுதலாக சந்தோஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வேண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழுதுபோக்கு, நல்ல சந்தோஷம்... இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைவார்கள்.

* பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசைகளையும் ஒளிவுமறைவாக வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்'. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார்கள். ஆசையையும் கொட்டித் தீர்த்துவிடுவார்கள்.

* பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள். - சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதிவிலக்கானவர்களாகவும் இருப்பார்கள்

காதலில் தகாத உறவு வேண்டவே வேண்டாம்..!


செக்ஸ் என்பது சந்தோஷமான ஓர் அனுபவம் என்றாலும், காதலில் அது நுழையாமல் இருப்பதுதான் நல்லது என்பது காதல் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கருத்து. ஆண்களது செக்ஸ் ஆர்வமும், பெண்களது செக்ஸ் ஆர்வமும் மிக வித்தியாசமானது.

தேவையான அளவு செக்ஸ் அனுபவித்ததும் அதைவிட சிறப்பாக வேறு பெண்ணிடம் செக்ஸ் கிடைக்கும் என அலையும் மனம் ஆண்களுக்கு உண்டு. ஆனால் பெண்கள் இயல்பாகவே ஒரே ஒருவரிடம் மட்டுமே உறவு கொள்ள விரும்புவார்கள்.

காதலித்த பெண்ணிடம் உறவு அனுபவித்தலும், அட இவ்வளவுதானா? என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் காதல் காணாமல் போய்விடும். காதலுக்கு முன் செக்ஸ் வைத்துக்கொண்டால் என்ன தப்பு என்பவர்கள் கீழ்க்கண்ட பதில்களைப் பார்த்த பின்னர் முடிவு செய்து கொள்ளுங்கள்.

பெண், ஆண் இருவருக்குமே திருமணம் வரையில் கூட கற்பை காப்பாற்ற முடியவில்லையே என்ற தன்னிரக்கம் ஏற்பட்டுவிடும்.

ஏதோ ஒரு மிகப்பெரிய குற்றம் செய்ததாக மனம் உறுத்திக்கொண்டே இருக்கும்.

ஆண் பெண் இருவருக்கும் பிளாக்மெயில் செய்வதற்கு இந்த சம்பவம் வழிவகுத்துவிடும்.

அடிக்கடி தவறு செய்யத் தூண்டும். சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் தேவையில்லாத கர்ப்பம் ஏற்பட்டு அதனால் பெரும் பிரச்சனைகள் உண்டாகலாம்.

எப்போதுமே கிடைக்காத பொருள் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருக்கும். காதலில் செக்ஸ் கிடைத்துவிட்டால் அதற்குப்பின், அங்கு எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது. பெரும் ஆர்வமும் இருக்காது

பெண்களிடம் ஆண்கள் விரும்பாதவை


ஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ, காதலியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது நல்லது...

1. `நாம கொஞ்சம் பேசணும்
'

உங்களவர், உலக சாம்பியன் வேகத்தில் ஓடி மறைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மேற்கண்ட மூன்று வார்த்தைகளைக் கூறினால் போதும்.

`ஏதோ பிரச்சினையைக் கிளப்பத் தான் அடி போடுகிறாள்' என்று உணர்ந்துகொண்டு உடனடியாகத் தலைமறைவாகி விடு வார்.

`பேசுவது' எல்லாம் கடைசியில் அழுகை, ஆத்திரம், தீர்வில்லாத நிலையில் தான் முடியும் என்று ஆண்களுக்குத் தெரியும்.

பெண்கள் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையை எப்படிக் கையாளுவது என்று ஆண்களுக்குத் தெரியாது. அப்போது கன்னாபின்னா வென்று நடக்கத் தொடங்கி விடுவார்கள்.

எதையும் மனந்திறந்து பேசித் தீர்க்க வேண்டும் என்பது கட்டுரைகளில் சரியாகத் தெரியலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவாக ஒத்து வராது.

2. `நீங்க அம்மா பையன்'


பெண்கள் தங்கள் துணைவருடன் உறவு சீர் கெட விரும்பினால், அவரின் அம்மாவை அடிக்கடி பேச்சில் இழுத்தால் போதும். `பாருங்க... உங்க அம்மா இப்படிப் பண்றாங்க', `உங்க அம்மா எப்போதும் அப்படித்தான்' என்றெல்லாம் சொல்வதை எந்த ஆணும் விரும்புவ தில்லை.

பெண்களுக்கு எப்படித் தங்கள் அம்மாவைப் பிடிக்குமோ, அப்படித்தான் ஆண் களுக்கும் தங்கள் அம்மாவைப் பிடிக்கும். அதனால் அம்மாவைக் குறை சொல்வதை அவர்கள் ரசிப்பதில்லை. அதேபோல, `நீங்க அம்மா பிள்ளை... உங்க அம்மா சொல்றது தான் உங்களுக்கு வேத வாக்கு' என்று கூறுவதையும் விரும்புவதில்லை.

பெண்கள் தங்களைத் தமது கணவர் அல்லது காதலரின் அம்மாவுடன் தராசுத் தட்டில் நிறுத்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமான அணுகுமுறையில் நடந்துகொள்ள வேண்டும். அது, பெண்கள் தாங்கள் அம்மாவாகும்போது உதவும்.

3. `உங்க நண்பரைப் பாருங்க'


`உங்க நண்பரைப் பாருங்க... எவ்வளவு ஸ்டைலா இருக்காரு! நீங்களுந்தான் இருக்கீங்களே, தொந்தியும் தொப்பையுமா...' என்று பேசும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் துணைவருடான உறவுக்குக்குத் தாங்களே வேட்டு வைப்பவர்கள்.

இப்படி பேசத் தொடங்குவது, `அப்படின்னா நீ `அவனை'யே காதலிச்சிருக்கலாம்' அல்லது, `நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கலாம்' என்ற வெறுப்பான கத்தலில் தான் முடியும்.

பெண்கள் தங்கள் கணவரின் அல்லது துணைவரின் நண்பரிடம் வெளிப்படை யாகக் காணாத பல குறைபாடுகள் இருக்கக்கூடும்.

கண்ணில் தெரிவதை மட்டும் கண்டு, வியப்பது அறிவீனம். பெண்கள் எப்படித் தங்களை இன்னொரு பெண்ணுடன் ஒப்பிடுவதை விரும்புவதில்லையோ, அதேபோலத்தான் ஆண்களும் என்று உணர வேண்டும்.

4. `நீங்க எப்பவும் இப்படித்தான்...

திருந்தவே மாட்டீங்க' முத்திரை குத்தப்படுவதை ஆண்கள் விரும்புவதில்லை. அதிலும் அவர்களே தங்களிடம் இருந்து துறக்க விரும்பும் பழக்கங்களை, குறைபாடுகளை அடிக்கடி குத்திக்காட்டுவதை தாங்குவதே இல்லை.

ஒருவரைப் பற்றி, `இவர் இப்படித்தான்' என்று வெகு சீக்கிரமாக முடிவு கட்டிவிடுவது பெண்களின் குறைபாடு. எல்லாருமே தவறு செய்வது இயல்பு. சிலருக்கு இயல்பாகவே சில தவறுகள் சிலமுறை நேர்ந்துவிடும்.

அதுகுறித்து அந்த ஆணே வருத்தத்தில், குற்ற உணர்வில் இருப்பார். அப்போது, ஆறுதலாக இருப்பதுதான் பெண் துணையின் மீதான மதிப்பை ஆணுக்கு உயர்த்தும்.

மாறாக, நொந்த வேளையில் `லந்து' செய்வது வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். `இப்பல்லாம்...' என்ற வார்த்தையையும் தவிர்க்கலாம். `இப்பல்லாம் நீங்க முன்ன மாதிரி அன்பாயில்ல...' என்று மூக்கைச் சிந்துவதால் பயனில்லை.

5. `தலையெல்லாம் நரைச்சுப் போச்சு'

மத்திய வயதை நெருங்கும் ஆண்களுக்கு தலையில் நரைமுடிகள் தலைகாட்டத் தொடங்குமë. அவற்றை `இளநரை' என்றெண்ணிச் சமாதானம் அடைவது ஆண்களின் வழக்கம். அதுகுறித்து அதிகம் சுட்டிக்காட்டுவதும், `உடனே சலூனுக்கு ஓடிப்போய் `டை' அடிச்சுட்டு வாங்க' என்று நெட்டித் தள்ளுவதும் ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

`கல்யாணத்துக்கு முன்னால கொடியிடையா இருந்தே... இப்போ தடியிடையா ஆயிட்டே...' என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வருமில்லையா?

உங்கள் காதலை அளவிட


காதல் புனிதமானது. புதிரானதும் கூட. ஆனால் என்றும் புதிதானது. காதலிப்பவர்களுக்கு இடையில் உள்ள உறவு எப்படி இருக்கிறது என்பதை அளவிட இங்கு ஒரு சுயபரிசோதனை கேள்வி-பதில் தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் உங்கள் காதலின் ஆழத்தை அளவிட்டுக் கொள்ளலாம். புதிதாக காதலிக்கத் தொடங்கினால் உங்கள் துணையை எப்படி கவர்ந்திழுக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

1. உங்கள் காதலரை சந்தித்தால் எதைப்பற்றிப் பேசிக் கொண்டு இருப்பீர்கள்?

அ. பணச் செலவு, சமுதாய நிலவரம், உயர்ந்த வாழ்க்கை கனவுகள் பற்றி...

ஆ. காதலரின் திறமைகள், வளர்ச்சி பற்றி..

இ. நீ நல்ல பையன்/ பொண்ணு போன்ற புகழ்ச்சி

2. உங்கள் காதலியை எங்கு அழைத்துச் செல்ல விரும்புகிறீர்கள்?

அ. புதிதாக தொடங்கப்பட்ட ரெஸ்டாரண்ட், கிளப்

ஆ. பாதுகாப்பான மற்றும் பேசிக் கொண்டிருக்க வசதியான சிற்றுண்டி சாலை, பார்க்

இ. குடும்ப உணவகத்துக்கு நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் அழைத்துச் செல்வேன்.

3. பெற்றோருடன் சென்றிருக்கும்போது தற்செயலாக உங்கள் காதலரை சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?


அ. ஜாடை செய்வேன், ஆனால் யாரென்று காட்டிக்கொள்ள மாட்டேன்.

ஆ. நான் உன்னை இங்கு சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று வியப்பு காட்டுவேன்.

இ. ஏற்கனவே தெரிந்தவர்போல அவரிடமும் பேசுவேன்.

4. அவர் உங்களுக்குத்தான் என்று நிச்சயமானால் உங்கள் முதல் திட்டம் என்ன?


அ. தொட்டுத் தொட்டுப் பேசுவேன், உறவு வைத்துக் கொள்ள சம்மதமா என்று கேட்பேன்.

ஆ. கைகளை பின்னிக்கொண்டு ஷாப்பிங் அழைத்துச் செல்வேன். நண்பர்கள் முன் அழைத்துச் சென்று உரிமை கொண்டாடுவேன்.

இ. என்னைப் பற்றி அவள் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைச் சொல்வேன். சில விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டி இருப்பதை விளக்குவேன்.

5. உங்கள் பிறந்த நாள் விழாவுக்கு உறவினர்களை அழைக்கிறீர்கள், அப்போது...


அ. எல்லோரையும் அழைப்பதுபோல் காதலரையும் அழைப்பேன். ஆனால் கண்டுகொள்ள மாட்டேன்..

ஆ. நிச்சயம் அவருடன் தனியாக இருக்கும்படி திட்டமிடுவேன்.

இ. உறவினர்களுடன் இருந்தாலும் அவ்வப்போது அவளை தனியே சந்தித்து பேசுவேன்.

6. காதலி எந்த விதத்தில் உங்களுக்குப் பொருத்தமானவர் என்று நினைக்கிறீர்கள்?


அ. பார்வைக்கு அழகானவர், படுக்கைக்கு பொருத்தமானவர்.

ஆ. எங்களுக்கு இடையில் உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது. என்னை புரிந்து கொண்டு செயல்படுவார்.

இ. எங்கள் குடும்பத்துக்கு பொருத்தமானவர்.

7. காதலரை நினைவூட்டும் மிகப்பெரிய விஷயம் எது?

அ. மற்ற காதலர்களின் நெருக்கங்களை காணும்போது.

ஆ. அவர் என்னுடன் பேசிய பேச்சுக்கள், பகிர்ந்து கொண்ட எஸ்.எம்.எஸ்.களை பார்க்கும் போது...

இ. விழாக்களில் எடுத்த புகைப்படங்ககளை பார்க்கும் போது...

* உங்கள் பதில்களில் மிகுதியாக `அ' விடை இருக்குமானால்...


உங்கள் காதலில் மோகம் மிகுந்திருக்கிறது. ஈர்ப்பால் மட்டும் உங்கள் காதல் அரும்பி இருக்கிறது. உடல் சார்ந்த தேவைக்காக நேசிக்கும் உங்கள் மனநிலை மாற வேண்டும்.

உடல் சார்ந்த உறவு மட்டும் காதலுமல்ல, வாழ்க்கையும் அல்ல. உண்மையான காதல் என்பது எல்லாவற்றுக்கும் முன்னுரிமை கொடுக்கும்.

விட்டுக்கொடுக்கும். எதிர்பார்ப்பும், நம்பிக்கை குறைவும் இருக்காது. உங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் நல்ல காதலும், சிறந்த உறவுகளும் அமையும்.

* "ஆ'' விடை அதிகமாக வருபவர்களுக்கு..
.

மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு உங்கள் காதல் ஆச்சரியமானது. அன்பு வழியில் அனுபவப்பூர்வமாக பயணிக்கிறீர்கள்.

சரியான புரிதலுடன் கூடிய விட்டுக்கொடுத்தலும், எல்லையில்லா நேசமும் உங்கள் காதலை மேலும் பெருகச் செய்யும். பாராட்டுக்கள்.

* விடைகளில் `இ' மிகுந்திருக்கும் உங்களுக்கு...


ஒரு ஈர்ப்புடன் பழகும் முதல் நிலையில் இருக்கிறீர்கள். காதலில் இது இரண்டும் கெட்டான் நிலை. அவர் மீது விருப்பம் இருந்தாலும் அது காதலா என்பது சந்தேகமே. பல விஷயங்களை எதிர்பார்க்கிறீர்கள், பழகுகிறீர்கள்.

உங்கள் எதிர்பார்ப்பு ஈடானால் மட்டும் நீங்கள் இன்னும் நெருக்கம் காட்டுவீர்கள். நேசம் என்பது எதிர்பார்ப்புடன் வருவதல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது.
thanks Net





புதன், 18 மே, 2011

நீங்கள் எந்த வகை

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்தலின் ஆதார ரகசியங்கள்' என்று சொல்வதுண்டு.

காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும்.

சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா... ஒன்றானது இல்லையா?!

நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது ஆச்சர்யமான செய்தி.

காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது; கொஞ்சம் 'பிளேபாய்’தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுன மொழியில்கூட காதல் செய்துவிடலாம். 'ப்ளடானிக் லவ்' (Platonic love) என்று சொல்வார்கள்.

ஆனால், ரொமான்டிக் விஷயம் அப்படி அல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், நடனம், இசை, கலை, இலக்கியம், எதிர்பாராத சர்ப்ரைஸ்களைக் கொடுத்தல் என்று எத்தனையோ பரிமாற்றங்கள் தேவைப்படும்.

'முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்சினையே பேசிக் கொள்ளாமல் இருப்பதுதான். மனம் திறந்து வெளிப்படையாகப் பேசிக் கொள்வதன் மூலமே பல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்

சந்தோசமாக வாழும் கணவன் - மனைவி உறவு மேம்பட, மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன் பாராட்ட வேண்டும். கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து மனைவி பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலையும், ரொமான்ஸையும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.

மனிதர்களில் மூன்று வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

1-முதல் வகை, ‘I am ok, your are also ok’.. அதாவது, 'நானும் சரியாக இருக்கிறேன். நீயும் சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.
2-இரண்டாவது வகை ‘I am not ok, but you are ok’.. அதாவது, 'நான் சரியாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.
3-மூன்றாவது வகை, ‘I am ok, but you are not ok’. இவர்கள், 'நான் சரியாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை' என்று நினைப்பவர்கள்.

இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச்சினைகள் அதிகம் இல்லாமல் நிம்மதியாக வாழ்பவர்கள்... முதல் வகைதான். 'நானும் சரி, நீயும் சரி. பேசித் தீர்ப்போம் வா' என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள்.

இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்த இரு வகையினரின் மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும்.

வெள்ளி, 13 மே, 2011

ஆண்களுக்கு சில டிப்ஸ்! பெண்கள் எதை எதை விரும்புவார்கள்.

* காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், `அந்த பொருள் எங்கே? இது எங்கே?’ என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அதேநேரம், பொறுப்பாக கேள்விகள் கேட்டால், அதற்குரிய செயலை பொறுப்பாக செய்ய எல்லா பெண்களும் தயாராகவே இருக்கிறார்களாம்.
* விடுமுறை நாட்களில் தங்கள் விருப்பம்போல் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல்லலாம். அன்றையதினம், `இன்று ஏதாவது விசேஷமாக செய்யலாமே…’ என்று வற்புறுத்தக்கூடாது.

* எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல்லாப் பெண் களுக்கும் பிடிக்கும். அவசரம் அவசர மாக அதைச் செய்வதில் அவர் களுக்கு உடன்பாடு இல்லை.

* திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கு காரண மாக மனைவியை குற்றம் சொல்லக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக் குமே உண்டு.

* எந்தவொரு முடிவை கணவன் எடுத் தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந் தள்ளக் கூடாது.

* ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.

* படுக்கையறையில் போர் அடிக்கும் விதமாக கணவன் செயல்படக்கூடாது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் புதுமையாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.

* அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ… பில் அதிகமாகி விடும்’ என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள். அதனால், அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும்.

* வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்ட மாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க், பீச், ஓட்டல், தியேட்டருக்கோ, வருடத்திற்கு ஒருமுறையாவது வெளிர் சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும்.

* கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்.