செவ்வாய், 15 நவம்பர், 2011
காதலில் ஆறு வகை உள்ளதாம் ,இதில் உங்கள் காதல் எப்படிப்பட்டது?
மனதிற்குள் பூக்கள் பூத்த அந்த தருணங்களை சேகரித்தாலே ஆயிரம் ஆயிரம் திரைப்படங்களுக்கும், நாவல்களுக்கு கதையாக உருவாக்கலாம். நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம். உங்கள் ரொமான்டிக் செயல்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எப்படிப்பட்டது என்பதை விவரிக்கிறார்கள்.
புரிதலும் விட்டுகொடுத்தலும்
காதல் பிறந்த உடனேயே அனைவரும் கவிஞர்களாகி விடுகின்றனர். பேப்பரும் பேனாவும் கிடைத்தாலே போதும் சரம் சரமாக கவிதைகள் ஊற்றெடுக்கும்.உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும் காதல்வரிகளை மட்டுமே உதடுகள் உச்சரிக்கும். நீங்களும் அப்படிப்பட்டவர் எனில் காதல் வசப்பட்டிருக்கும் உங்களுக்குள் அதிக நெருக்கம் இருக்கும் என்று அர்த்தம். உங்கள் கட்டுக்கடங்காத விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக காதலியின் விருப்பத்தை எதிர்பார்த்து பாடலாக பாடி அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதனை மன்மதக்காதல் என்கின்றனர் ரொமான்டிக் ஆய்வாளர்கள். இந்த வகை காதலர்கள் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து ஆத்மார்த்தமான காதலர்களாக திகழ்வார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஒருவருக்கொருவர் புரிதல் தன்மையுடனும், மற்றவர் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி விட்டுக் கொடுத்தும் வாழ்வார்கள். இந்த காதலர்கள் மகிழ்ச்சியாகவும், கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்.
பொழுது போக்கு காதல்
காதலியின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஏகப்பட்ட செயல்களை செய்து அவளை தன்வசமே வைத்திருக்கும் காதலர்கள் ஏராளமானோர் உண்டு. இத்தகைய காதல் கவன ஈர்ப்புக்காதல் என்கின்றனர். உங்களுக்குள் காதல் உணர்வுகள் நிரம்பி இருக்கிறது. ஆனால் அவளுக்குள் அதுபோன்ற உணர்வு நிறைய இருக்காது எனவே இது முழுமையான காதல் அல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள் நிலைமை இப்படி இருந்தாலும் இருவருமே ஒருவரையொருவர் ரசிப்பீர்கள். அவள் தனிமையில் சந்திப்பதையோ, நெருக்கத்தை அனுமதிப்பதையோ விரும்பமாட்டாள். இது பொழுதுபோக்கு காதலென்கின்றனர் அவர்கள்.
வாழ்க்கை முழுதும் தொடரும்
காதலியின் மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் உண்டு. அவள் மீது உள்ள அக்கறையினால் எண்ணற்ற செயல்களை செய்து அவளின் நன்மதிப்பினை ஏராளமாக பெறும் ஆண்கள் உண்டு. கண்ணியமான பார்வையும் நேசத்தை வெளிப்படுத்த சரியான தருணத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் காதலை சேமிப்புக் காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள். காதல் உணர்வையும் புரிந்து வைத்திருப்பீர்கள். காதலி கிடைத்தால் இவளைப்போல கிடைக்கவேண்டும் என்று ஏங்கவும் செய்வீர்கள். ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத அளவுக்கு நேசம் வைத்திருப்பீர்கள். இருவரும் ஆழமான அன்பு வைத்திருந்தாலும் கிட்டத்தட்ட இது ஆழமான நட்புணர்வே. நீங்கள் விரும்பினால் இந்த நட்பை வாழ்க்கை முழுவதும் நீடிக்கவும் செய்யலாம்.
எல்லைமீறாத காதல்
இருவருக்கும் பரஸ்பரம் பிடித்திருக்கிறது. இருவரும் நன்றாகவே பேசிக்கொண்டாலும் எல்லைமீறாமல் செல்கிறது உங்கள் காதல். ஒருவருக்கொருவர் பிரச்சினைகளை பட்டியலிட்டாலும் முட்டிக்கொள்வதில்லை. காமத்தைப் பற்றிப் பேசினாலும் விசரம் இல்லை எனில் உங்கள் காதல் திட்டமிட்டக் காதல். வாழ்வின் போக்கை புரிந்து கொண்டு ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுக்கவும், வாழவும் விரும்பும் ஜோடி நீங்கள். உங்கள் உணர்வுகளும் கூட எல்லைக்குட்பட்டதுதான். உங்கள் அன்பும் என்றும் நீடித்திருக்கும்.
விட்டுக்கொடுக்காத காதல்
ஒருவருக்கொருவர் சீண்டிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பார்கள். எல்லை மீறல்கள் இருந்தாலும், அந்த சீண்டலை அனுமதிப்பர். உங்களுடைய காதல் இப்படிப்பட்டது என்றால் அதனை இனிப்பு காதல் என்று வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். இவர்களுக்குள் ஆழமான காதல் உணர்வு இருக்கும். அதிக உணர்ச்சியும் கொஞ்சம் கூச்சம் உடையவராகவும் இருப்பார்கள். இவர்கள் காதலில் காமம் கலந்திருப்பதால், ஒருவரின் தீண்டலை இன்னொருவர் தடுக்கமாட்டார். இவர்களுக்குள் தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமும், சில ஒளிவு மறைவு ரகசியங்களும் இருக்கும். ஆனால் காதலை கடைசிவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
உயிர் தரும் காதல்
காதலிக்கோ, காதலருக்கோ ஏதாவது ஒன்று என்றால் உடனே அக்கறையுடன் கவனிக்க கிளம்பிவிடுவார்கள். விளையாட்டுக்கு அழைத்தால் கூட லீவ் போட்டுவிட்டு உடனே காதலிப்பவர்களை உடனே பார்க்க கிளம்பிவிடுபவர்களா நீங்கள். அப்படியானால் ஆத்மார்த்தமான இந்த காதலை வெற்றிக்காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள். உங்கள் காதல் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இப்படிப்பட்ட காதலர்கள் ஒருவருக் கொருவர் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள். பிரச்சினை என்றால் தன்னையே தரவும் தயாராவார்கள். என்ன காதலர்களே நீங்களும் உங்கள் காதல் எப்படிப்பட்டது என்றும் எந்த வகையைச் சார்ந்தது என்பதை கண்டுபிடித்து கொள்ளுங்கள்.
வியாழன், 14 ஜூலை, 2011
ஆண் பெண் நட்பு காதலாக மாறுவதற்கான காரணம்.
ஞாயிறு, 26 ஜூன், 2011
மண வாழ்க்கை மனம் கவர்ந்ததாக மாற்ற.................
சாதாரண காய்ச்சல், தலைவலி என்றால் கூட துடித்துப்போகும் அதே கணவன்தான் மணமாகி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தங்களை கண்டுகொள்வதில்லை என்பது பெரும்பாலான பெண்களின் புகார்.
இதன் காரணமாகவே சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் பூதாகரமாக பார்க்கப்பட்டு பிரச்சினைகளாக உருவெடுகின்றன. பெண்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அலசும் கட்டுரை இது.
மனம் கவர்ந்தவரிடம் எதிர்பார்ப்பது வெறும் உடல் ரீதியான உறவு மட்டுமே கணவரிடம் இருந்து பெண்கள் எதிர்பார்ப்பதில்லை. அதையும் தாண்டி மனதளவில் ஆறுதலாக இருக்கும் ஆண்களையே பெண்கள் விரும்புகின்றனர்.
பெண்களின் தேடுதல் மிகவும் பெரியது. அதை நிறைவேற்றும் ஆண்களை அவர்கள் பூஜிக்கின்றனர். பேசி புரியவைக்கலாம் பேச்சு என்பது இரு மனங்களுக்கிடையேயான இறுக்கத்தை தளர்த்தும் ஆயுதம்.
மனதில் பாரம் என்றால் இருவரும் பேசுங்கள். அதிகமாக பேசுவது ஆறுதலைத் தரும். இருவருக்கிடையேயான நேசத்தை பகிர்ந்து கொள்ள பேச்சு உதவும். புறத்தோற்றத்தை ஒதுக்கித்தள்ளுங்கள் மணமான புதிதில் ஒல்லியாக இருக்கும் பெண்கள் குழந்தை பெற்றவுடன் அவர்களின் உடல் குண்டாவது இயல்பு.
இது அநேக ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயமாக இருக்கிறது. மனைவியின் புறத்தோற்றத்தை விமர்சனம் செய்யும் கணவர்கள் இன்றும் இருக்கின்றனர்.
இதனால் மனரீதியான பிரச்சினைக்கு பெண்கள் ஆளாகின்றனர். அழகு என்பது உருவத்தில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை புரியவைக்க வேண்டும்.
பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ளும் ஆண்களே நல்ல துணைவர்களாக இருக்க முடியும். சின்ன சின்ன ரொமன்ஸ் தாம்பத்ய உறவு மட்டுமே மணவாழ்க்கைக்கு முக்கியமில்லை. சின்ன சின்ன ரொமன்ஸ்களையும் பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெண்கள் எதிர்பாராத நேரத்தில் அவ்வப்போது கொடுக்கும் முத்தம். சமையலறையில் சத்தமின்றி செய்யும் சில்மிசங்கள். மனைவியின் கைகளை பிடித்து உனக்கு நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் விதமாக காதோரம் கிசு கிசுப்பாக கூறும் ஐ லவ் யூ என்ற வார்த்தை என பெண்கள் எதிர்பார்ப்பது எத்தனையோ உண்டு.
ஆனால் இவற்றை நிறைய ஆண்கள் செய்யத் தவறிவிடுகின்றனர். இனிய உறவின் உன்னதம் ஆண்கள் அவசரக்காரர்கள். தங்களின் காரியம் முடிந்தவுடன் நிம்மதியாக ரெஸ்ட் எடுக்கப் போய்விடுவார்கள்.
ஆனால் பெண்களுக்கு எதையுமே ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். கணவருடனான நெருக்கத்தை அசை போடுவதில் பெண்களுக்கு அலாதி பிரியம் உண்டு.
எனவே உறவின் போது மட்டுமல்லாது உறவிற்கு முன்பும், பின்பும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். இவற்றை கடைபிடிக்கும் ஆண்களை பெண்கள் ஆராதிப்பார்கள் என்பதில் ஐயமில்லை
வியாழன், 2 ஜூன், 2011
நட்பு பொன்மொழிகள்
|
புத்தகங்கள்தான் நம்முடன் பேசும் மெளன நண்பர்கள்.
எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
பெருமைக்காரன் கடவுளை இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான்.
நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.
வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.
ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.
சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.
உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.
ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.
புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.
திங்கள், 30 மே, 2011
காதலில் தோல்வி என்றால் என்ன செய்வது..?
எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே..
மீண்டும் பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு நபர் யாரும் இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும்.
காதல் தோல்விக்காக சிலர் தற்கொலை செய்கிறார்களே என்ன செய்வது?.....!!!
சிறப்பாய் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் காதல். காதல் இல்லை என்றதும் உலக வாழ்வே வேஸ்ட் என தன்னைத்தானே அழித்துக் கொள்பவர்களுக்கு பிறரால் எதனைத்தான் எடுத்துக்கூற முடியும்.? அவர்களது மனம் எதையும் ஏற்றுக்கொள்ளும் தன்மையில் இருப்பது என்பது உண்மைதான். ஆனால் நடைமுறை வாழ்க்கை பற்றி சிந்திக்கும் போதுவாழ்வின் உண்மைத்தன்மையும் தமது நிலைக்குமான வித்தியாசம் தெளிவாக புரியும்.
காதலில் வெற்றியடைந்தவர்கள் அடுத்ததாக திருமணம், குழந்தை, படிப்பு என எதிர்காலத்தை யோசித்து காதலை பெரும்பாலும் தொலைத்துவிடுவார்கள்.
ஆனால் காதலில் தோற்றவர்கள் அதனை வாழ்நாள் முழுவதும் மறப்பதே இல்லை. மனதிற்குள் ஒரு தாஜ்மகால் கட்டி அங்கே தோற்கப்பட்ட காதலை பூஜித்து வருவார்கள்.
ஒரு வகையில் காதலில் தோல்வி என்பதும் சுகமான அனுபவமே. நீங்கள் விரும்பிய ஒரு நபர் கிடைத்துவிட்டால் அவர் மீதிருந்த ஆசை, ஆர்வம், அன்பு எல்லாமே குறைந்துபோய்விடலாம். உங்களுக்குத் தெரியாமல் அவரிடம் சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் இருக்கலாம். இவை எதுவுமே இல்லாமல் உங்கள் மனதில் பரிசுத்தமாக இருக்கக்கூடியது காதல் தோல்வி.
காதலில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் எப்போது காதலிக்கத் தொடங்குவது என சிலர் கேட்பார்கள். காதல் என்பது சுவாசம் மாரிரி, ஒரு நொடியும் சும்மா இருக்கக்கூடாது. அதனால் ஒரு காதல் முடிந்துவிட்டால், உடனடியாக அடுத்த காதலை தொடரலாம். அல்லது உங்கள் மனம் சமாதானமான பின் தொடரலாம். “மாறுதல் என்பது தான் என்றும் மாறாத ஒரு விடையமாம்.” எனவே நீங்கள் சற்று மாறிக்கொள்வது தான் உங்கள் எதிர்காலத்தை பிரகாசிக்கச் செய்யும்.
திங்கள், 23 மே, 2011
பெண்ணுக்குள் இருக்கும் அதிசயம்
உளவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சில அடிப்படை உண்மைகள் இங்கே...
* பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறாமல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.
* ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.
* குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் சொல்லிவிட்டு மறந்துவிடுவார்கள்.
* ஆண்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக்கும். சுயநலவாதிகள். ஆனால் பெண்களுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்.
* உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர்களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.
* ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வேண்டும். கூடுதலாக சந்தோஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வேண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழுதுபோக்கு, நல்ல சந்தோஷம்... இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைவார்கள்.
* பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசைகளையும் ஒளிவுமறைவாக வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்'. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார்கள். ஆசையையும் கொட்டித் தீர்த்துவிடுவார்கள்.
* பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள். - சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதிவிலக்கானவர்களாகவும் இருப்பார்கள்
காதலில் தகாத உறவு வேண்டவே வேண்டாம்..!
தேவையான அளவு செக்ஸ் அனுபவித்ததும் அதைவிட சிறப்பாக வேறு பெண்ணிடம் செக்ஸ் கிடைக்கும் என அலையும் மனம் ஆண்களுக்கு உண்டு. ஆனால் பெண்கள் இயல்பாகவே ஒரே ஒருவரிடம் மட்டுமே உறவு கொள்ள விரும்புவார்கள்.
காதலித்த பெண்ணிடம் உறவு அனுபவித்தலும், அட இவ்வளவுதானா? என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் காதல் காணாமல் போய்விடும். காதலுக்கு முன் செக்ஸ் வைத்துக்கொண்டால் என்ன தப்பு என்பவர்கள் கீழ்க்கண்ட பதில்களைப் பார்த்த பின்னர் முடிவு செய்து கொள்ளுங்கள்.
பெண், ஆண் இருவருக்குமே திருமணம் வரையில் கூட கற்பை காப்பாற்ற முடியவில்லையே என்ற தன்னிரக்கம் ஏற்பட்டுவிடும்.
ஏதோ ஒரு மிகப்பெரிய குற்றம் செய்ததாக மனம் உறுத்திக்கொண்டே இருக்கும்.
ஆண் பெண் இருவருக்கும் பிளாக்மெயில் செய்வதற்கு இந்த சம்பவம் வழிவகுத்துவிடும்.
அடிக்கடி தவறு செய்யத் தூண்டும். சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் தேவையில்லாத கர்ப்பம் ஏற்பட்டு அதனால் பெரும் பிரச்சனைகள் உண்டாகலாம்.
எப்போதுமே கிடைக்காத பொருள் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருக்கும். காதலில் செக்ஸ் கிடைத்துவிட்டால் அதற்குப்பின், அங்கு எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது. பெரும் ஆர்வமும் இருக்காது
பெண்களிடம் ஆண்கள் விரும்பாதவை
1. `நாம கொஞ்சம் பேசணும்'
உங்களவர், உலக சாம்பியன் வேகத்தில் ஓடி மறைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மேற்கண்ட மூன்று வார்த்தைகளைக் கூறினால் போதும்.
`ஏதோ பிரச்சினையைக் கிளப்பத் தான் அடி போடுகிறாள்' என்று உணர்ந்துகொண்டு உடனடியாகத் தலைமறைவாகி விடு வார்.
`பேசுவது' எல்லாம் கடைசியில் அழுகை, ஆத்திரம், தீர்வில்லாத நிலையில் தான் முடியும் என்று ஆண்களுக்குத் தெரியும்.
பெண்கள் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையை எப்படிக் கையாளுவது என்று ஆண்களுக்குத் தெரியாது. அப்போது கன்னாபின்னா வென்று நடக்கத் தொடங்கி விடுவார்கள்.
எதையும் மனந்திறந்து பேசித் தீர்க்க வேண்டும் என்பது கட்டுரைகளில் சரியாகத் தெரியலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவாக ஒத்து வராது.
2. `நீங்க அம்மா பையன்'
பெண்கள் தங்கள் துணைவருடன் உறவு சீர் கெட விரும்பினால், அவரின் அம்மாவை அடிக்கடி பேச்சில் இழுத்தால் போதும். `பாருங்க... உங்க அம்மா இப்படிப் பண்றாங்க', `உங்க அம்மா எப்போதும் அப்படித்தான்' என்றெல்லாம் சொல்வதை எந்த ஆணும் விரும்புவ தில்லை.
பெண்களுக்கு எப்படித் தங்கள் அம்மாவைப் பிடிக்குமோ, அப்படித்தான் ஆண் களுக்கும் தங்கள் அம்மாவைப் பிடிக்கும். அதனால் அம்மாவைக் குறை சொல்வதை அவர்கள் ரசிப்பதில்லை. அதேபோல, `நீங்க அம்மா பிள்ளை... உங்க அம்மா சொல்றது தான் உங்களுக்கு வேத வாக்கு' என்று கூறுவதையும் விரும்புவதில்லை.
பெண்கள் தங்களைத் தமது கணவர் அல்லது காதலரின் அம்மாவுடன் தராசுத் தட்டில் நிறுத்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமான அணுகுமுறையில் நடந்துகொள்ள வேண்டும். அது, பெண்கள் தாங்கள் அம்மாவாகும்போது உதவும்.
3. `உங்க நண்பரைப் பாருங்க'
`உங்க நண்பரைப் பாருங்க... எவ்வளவு ஸ்டைலா இருக்காரு! நீங்களுந்தான் இருக்கீங்களே, தொந்தியும் தொப்பையுமா...' என்று பேசும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் துணைவருடான உறவுக்குக்குத் தாங்களே வேட்டு வைப்பவர்கள்.
இப்படி பேசத் தொடங்குவது, `அப்படின்னா நீ `அவனை'யே காதலிச்சிருக்கலாம்' அல்லது, `நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கலாம்' என்ற வெறுப்பான கத்தலில் தான் முடியும்.
பெண்கள் தங்கள் கணவரின் அல்லது துணைவரின் நண்பரிடம் வெளிப்படை யாகக் காணாத பல குறைபாடுகள் இருக்கக்கூடும்.
கண்ணில் தெரிவதை மட்டும் கண்டு, வியப்பது அறிவீனம். பெண்கள் எப்படித் தங்களை இன்னொரு பெண்ணுடன் ஒப்பிடுவதை விரும்புவதில்லையோ, அதேபோலத்தான் ஆண்களும் என்று உணர வேண்டும்.
4. `நீங்க எப்பவும் இப்படித்தான்...
திருந்தவே மாட்டீங்க' முத்திரை குத்தப்படுவதை ஆண்கள் விரும்புவதில்லை. அதிலும் அவர்களே தங்களிடம் இருந்து துறக்க விரும்பும் பழக்கங்களை, குறைபாடுகளை அடிக்கடி குத்திக்காட்டுவதை தாங்குவதே இல்லை.
ஒருவரைப் பற்றி, `இவர் இப்படித்தான்' என்று வெகு சீக்கிரமாக முடிவு கட்டிவிடுவது பெண்களின் குறைபாடு. எல்லாருமே தவறு செய்வது இயல்பு. சிலருக்கு இயல்பாகவே சில தவறுகள் சிலமுறை நேர்ந்துவிடும்.
அதுகுறித்து அந்த ஆணே வருத்தத்தில், குற்ற உணர்வில் இருப்பார். அப்போது, ஆறுதலாக இருப்பதுதான் பெண் துணையின் மீதான மதிப்பை ஆணுக்கு உயர்த்தும்.
மாறாக, நொந்த வேளையில் `லந்து' செய்வது வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். `இப்பல்லாம்...' என்ற வார்த்தையையும் தவிர்க்கலாம். `இப்பல்லாம் நீங்க முன்ன மாதிரி அன்பாயில்ல...' என்று மூக்கைச் சிந்துவதால் பயனில்லை.
5. `தலையெல்லாம் நரைச்சுப் போச்சு'
மத்திய வயதை நெருங்கும் ஆண்களுக்கு தலையில் நரைமுடிகள் தலைகாட்டத் தொடங்குமë. அவற்றை `இளநரை' என்றெண்ணிச் சமாதானம் அடைவது ஆண்களின் வழக்கம். அதுகுறித்து அதிகம் சுட்டிக்காட்டுவதும், `உடனே சலூனுக்கு ஓடிப்போய் `டை' அடிச்சுட்டு வாங்க' என்று நெட்டித் தள்ளுவதும் ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
`கல்யாணத்துக்கு முன்னால கொடியிடையா இருந்தே... இப்போ தடியிடையா ஆயிட்டே...' என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வருமில்லையா?
உங்கள் காதலை அளவிட
இதன் மூலம் உங்கள் காதலின் ஆழத்தை அளவிட்டுக் கொள்ளலாம். புதிதாக காதலிக்கத் தொடங்கினால் உங்கள் துணையை எப்படி கவர்ந்திழுக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
1. உங்கள் காதலரை சந்தித்தால் எதைப்பற்றிப் பேசிக் கொண்டு இருப்பீர்கள்?
அ. பணச் செலவு, சமுதாய நிலவரம், உயர்ந்த வாழ்க்கை கனவுகள் பற்றி...
ஆ. காதலரின் திறமைகள், வளர்ச்சி பற்றி..
இ. நீ நல்ல பையன்/ பொண்ணு போன்ற புகழ்ச்சி
2. உங்கள் காதலியை எங்கு அழைத்துச் செல்ல விரும்புகிறீர்கள்?
அ. புதிதாக தொடங்கப்பட்ட ரெஸ்டாரண்ட், கிளப்
ஆ. பாதுகாப்பான மற்றும் பேசிக் கொண்டிருக்க வசதியான சிற்றுண்டி சாலை, பார்க்
இ. குடும்ப உணவகத்துக்கு நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் அழைத்துச் செல்வேன்.
3. பெற்றோருடன் சென்றிருக்கும்போது தற்செயலாக உங்கள் காதலரை சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?
அ. ஜாடை செய்வேன், ஆனால் யாரென்று காட்டிக்கொள்ள மாட்டேன்.
ஆ. நான் உன்னை இங்கு சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று வியப்பு காட்டுவேன்.
இ. ஏற்கனவே தெரிந்தவர்போல அவரிடமும் பேசுவேன்.
4. அவர் உங்களுக்குத்தான் என்று நிச்சயமானால் உங்கள் முதல் திட்டம் என்ன?
அ. தொட்டுத் தொட்டுப் பேசுவேன், உறவு வைத்துக் கொள்ள சம்மதமா என்று கேட்பேன்.
ஆ. கைகளை பின்னிக்கொண்டு ஷாப்பிங் அழைத்துச் செல்வேன். நண்பர்கள் முன் அழைத்துச் சென்று உரிமை கொண்டாடுவேன்.
இ. என்னைப் பற்றி அவள் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைச் சொல்வேன். சில விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டி இருப்பதை விளக்குவேன்.
5. உங்கள் பிறந்த நாள் விழாவுக்கு உறவினர்களை அழைக்கிறீர்கள், அப்போது...
அ. எல்லோரையும் அழைப்பதுபோல் காதலரையும் அழைப்பேன். ஆனால் கண்டுகொள்ள மாட்டேன்..
ஆ. நிச்சயம் அவருடன் தனியாக இருக்கும்படி திட்டமிடுவேன்.
இ. உறவினர்களுடன் இருந்தாலும் அவ்வப்போது அவளை தனியே சந்தித்து பேசுவேன்.
6. காதலி எந்த விதத்தில் உங்களுக்குப் பொருத்தமானவர் என்று நினைக்கிறீர்கள்?
அ. பார்வைக்கு அழகானவர், படுக்கைக்கு பொருத்தமானவர்.
ஆ. எங்களுக்கு இடையில் உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது. என்னை புரிந்து கொண்டு செயல்படுவார்.
இ. எங்கள் குடும்பத்துக்கு பொருத்தமானவர்.
7. காதலரை நினைவூட்டும் மிகப்பெரிய விஷயம் எது?
அ. மற்ற காதலர்களின் நெருக்கங்களை காணும்போது.
ஆ. அவர் என்னுடன் பேசிய பேச்சுக்கள், பகிர்ந்து கொண்ட எஸ்.எம்.எஸ்.களை பார்க்கும் போது...
இ. விழாக்களில் எடுத்த புகைப்படங்ககளை பார்க்கும் போது...
* உங்கள் பதில்களில் மிகுதியாக `அ' விடை இருக்குமானால்...
உங்கள் காதலில் மோகம் மிகுந்திருக்கிறது. ஈர்ப்பால் மட்டும் உங்கள் காதல் அரும்பி இருக்கிறது. உடல் சார்ந்த தேவைக்காக நேசிக்கும் உங்கள் மனநிலை மாற வேண்டும்.
உடல் சார்ந்த உறவு மட்டும் காதலுமல்ல, வாழ்க்கையும் அல்ல. உண்மையான காதல் என்பது எல்லாவற்றுக்கும் முன்னுரிமை கொடுக்கும்.
விட்டுக்கொடுக்கும். எதிர்பார்ப்பும், நம்பிக்கை குறைவும் இருக்காது. உங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் நல்ல காதலும், சிறந்த உறவுகளும் அமையும்.
* "ஆ'' விடை அதிகமாக வருபவர்களுக்கு...
மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு உங்கள் காதல் ஆச்சரியமானது. அன்பு வழியில் அனுபவப்பூர்வமாக பயணிக்கிறீர்கள்.
சரியான புரிதலுடன் கூடிய விட்டுக்கொடுத்தலும், எல்லையில்லா நேசமும் உங்கள் காதலை மேலும் பெருகச் செய்யும். பாராட்டுக்கள்.
* விடைகளில் `இ' மிகுந்திருக்கும் உங்களுக்கு...
ஒரு ஈர்ப்புடன் பழகும் முதல் நிலையில் இருக்கிறீர்கள். காதலில் இது இரண்டும் கெட்டான் நிலை. அவர் மீது விருப்பம் இருந்தாலும் அது காதலா என்பது சந்தேகமே. பல விஷயங்களை எதிர்பார்க்கிறீர்கள், பழகுகிறீர்கள்.
உங்கள் எதிர்பார்ப்பு ஈடானால் மட்டும் நீங்கள் இன்னும் நெருக்கம் காட்டுவீர்கள். நேசம் என்பது எதிர்பார்ப்புடன் வருவதல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது.
புதன், 18 மே, 2011
நீங்கள் எந்த வகை
காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும்.
சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா... ஒன்றானது இல்லையா?!
நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது ஆச்சர்யமான செய்தி.
காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது; கொஞ்சம் 'பிளேபாய்’தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுன மொழியில்கூட காதல் செய்துவிடலாம். 'ப்ளடானிக் லவ்' (Platonic love) என்று சொல்வார்கள்.
ஆனால், ரொமான்டிக் விஷயம் அப்படி அல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், நடனம், இசை, கலை, இலக்கியம், எதிர்பாராத சர்ப்ரைஸ்களைக் கொடுத்தல் என்று எத்தனையோ பரிமாற்றங்கள் தேவைப்படும்.
'முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்சினையே பேசிக் கொள்ளாமல் இருப்பதுதான். மனம் திறந்து வெளிப்படையாகப் பேசிக் கொள்வதன் மூலமே பல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்
சந்தோசமாக வாழும் கணவன் - மனைவி உறவு மேம்பட, மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன் பாராட்ட வேண்டும். கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து மனைவி பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலையும், ரொமான்ஸையும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.
மனிதர்களில் மூன்று வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
1-முதல் வகை, ‘I am ok, your are also ok’.. அதாவது, 'நானும் சரியாக இருக்கிறேன். நீயும் சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.
2-இரண்டாவது வகை ‘I am not ok, but you are ok’.. அதாவது, 'நான் சரியாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.
3-மூன்றாவது வகை, ‘I am ok, but you are not ok’. இவர்கள், 'நான் சரியாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை' என்று நினைப்பவர்கள்.
இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச்சினைகள் அதிகம் இல்லாமல் நிம்மதியாக வாழ்பவர்கள்... முதல் வகைதான். 'நானும் சரி, நீயும் சரி. பேசித் தீர்ப்போம் வா' என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள்.
இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்த இரு வகையினரின் மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும்.
வெள்ளி, 13 மே, 2011
ஆண்களுக்கு சில டிப்ஸ்! பெண்கள் எதை எதை விரும்புவார்கள்.
* காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், `அந்த பொருள் எங்கே? இது எங்கே?’ என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அதேநேரம், பொறுப்பாக கேள்விகள் கேட்டால், அதற்குரிய செயலை பொறுப்பாக செய்ய எல்லா பெண்களும் தயாராகவே இருக்கிறார்களாம்.
* விடுமுறை நாட்களில் தங்கள் விருப்பம்போல் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல்லலாம். அன்றையதினம், `இன்று ஏதாவது விசேஷமாக செய்யலாமே…’ என்று வற்புறுத்தக்கூடாது.
* எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல்லாப் பெண் களுக்கும் பிடிக்கும். அவசரம் அவசர மாக அதைச் செய்வதில் அவர் களுக்கு உடன்பாடு இல்லை.
* திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கு காரண மாக மனைவியை குற்றம் சொல்லக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக் குமே உண்டு.
* எந்தவொரு முடிவை கணவன் எடுத் தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந் தள்ளக் கூடாது.
* ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.
* படுக்கையறையில் போர் அடிக்கும் விதமாக கணவன் செயல்படக்கூடாது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் புதுமையாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.
* அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ… பில் அதிகமாகி விடும்’ என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள். அதனால், அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும்.
* வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்ட மாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க், பீச், ஓட்டல், தியேட்டருக்கோ, வருடத்திற்கு ஒருமுறையாவது வெளிர் சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும்.
* கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்.
* எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல்லாப் பெண் களுக்கும் பிடிக்கும். அவசரம் அவசர மாக அதைச் செய்வதில் அவர் களுக்கு உடன்பாடு இல்லை.
* திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கு காரண மாக மனைவியை குற்றம் சொல்லக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக் குமே உண்டு.
* எந்தவொரு முடிவை கணவன் எடுத் தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந் தள்ளக் கூடாது.
* ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.
* படுக்கையறையில் போர் அடிக்கும் விதமாக கணவன் செயல்படக்கூடாது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் புதுமையாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.
* அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ… பில் அதிகமாகி விடும்’ என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள். அதனால், அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும்.
* வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்ட மாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க், பீச், ஓட்டல், தியேட்டருக்கோ, வருடத்திற்கு ஒருமுறையாவது வெளிர் சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும்.
* கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்.